மூன்றாம் நந்திவர்மன் (Nandivarman III) என்பவர் பல்லவ மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிகாலம் 825-850. இவர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் பேரனும் தந்திவர்மனின் மகனுமாவார். இவருக்கு இரு மனைவியர்கள் மற்றும் இரு மகன்கள். பல்லவப் பேரரசை இரு பகுதிகளாகப் பிரித்து தென் பகுதியை நிருபதுங்கவர்மனுக்கும், வட பகுதியை கம்பவர்மனுக்கும் (பழுவேட்டரையரின் புதல்வி கண்டன் மாறம்பாவையரின் மகன்) கொடுத்தார்[1].

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன்சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணுபொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் Iபொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்)பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் IIபொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன்பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்)பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் IIபொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்)பொ. யு. 731 - 796
தந்திவர்மன்பொ. யு. 775 - 825
நந்திவர்மன் IIIபொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி)பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி)பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன்பொ. யு. 882 - 901
தொகு
மூடு

ஆட்சி

மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவர் மீண்டும் வலுப்படுத்தினார். இராஷ்டிரகூடர்களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாண்டியர்களை காஞ்சிக்கருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் தோற்கடித்தார். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை வைகையாறு வரை விரட்டிச் சென்றார். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தார்[2].




இம்மன்னரின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவர் கடல்கடந்து சயாம் மற்றும் மலாயா நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

சமயம்

மூன்றாம் நந்திவர்மன் சைவ சமயத்தை சார்ந்தவராக இருந்தார்[3].

நந்திக் கலம்பகம் இம்மன்னரை பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் 'பல்லவர் கோன்', மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளார். இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவர் என்று செய்யுள் 104, 107 கூறுகின்றன.[4]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.