தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு நிகழ்வு. From Wikipedia, the free encyclopedia
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள், (மலாய்: Sukan Asia Tenggara; ஆங்கிலம்: Southeast Asian Games) என்பது தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு சின்னம் | |
சுருக்கம் | சி விளையாட்டுகள் SEA Games |
---|---|
முதல் நிகழ்வு | 1959 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்; பாங்காக், தாய்லாந்து |
ஒவ்வொரு | 2 ஆண்டுகள் |
காரணம் | தென்கிழக்கு ஆசிய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான விளையாட்டு நிகழ்வு |
தலைமையகம் | பாங்காக், தாய்லாந்து |
தலைவர் | சாரூக் அரிச்சகரன் |
இணையதளம் | SEAGFOffice.org |
இந்தத் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளைச் சுருக்கமாக ‘சி’ விளையாட்டுகள் (SEA Games) என்று அழைக்கிறார்கள்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் நிகழ்வு, தென்கிழக்கு ஆசிய விளையாட்டு சம்மேளனத்தின் (Southeast Asian Games Federation) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதே வேளையில் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் (IOC - International Olympic Committee) மற்றும் ஆசிய ஒலிம்பிக் மன்றம் (Olympic Council of Asia - OCA) ஆகியவற்றின் மேற்பார்வையிலும் உள்ளது.
ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஐந்து துணைப் பிராந்திய விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் விளங்குகிறது. மற்றவை:
இந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டி தொடங்கிய காலத்தில தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் (South East Asian Peninsular Games) அல்லது சியாப் விளையாட்டுகள் (SEAP Games) எனும் பெயரில் தொடங்கப்பட்டன.
1958 மே 22-ஆம் தேதி, ஜப்பான், தோக்கியோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு விளையாட்டு அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டனர்.
பர்மா (இப்போது மியான்மர்), கம்பூசியா (இப்போது கம்போடியா), லாவோஸ், மலாயா (இப்போது மலேசியா), தாய்லாந்து மற்றும் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) ஆகியவை உறுப்பிய நாடுகளாக இருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டுகளை நடத்துவதற்கு 1959 ஜூன் மாதம் அந்த உறுப்பிய நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஆறு நாடுகளைச் சேர்ந்த 527-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு அதிகாரிகளுடன் முதல் சியாப் விளையாட்டுப் போட்டி 1959 டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரையில் பாங்காக் நகரில் நடைபெற்றது.
பர்மா (இப்போது மியான்மர்), லாவோஸ், மலாயா, சிங்கப்பூர், தெற்கு வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.
1975-ஆம் ஆண்டு 8-ஆவது சியாப் விளையாட்டுப் போட்டிகளில், புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ப்பதற்கு சியாப் கூட்டமைப்பு பரிசீலித்தது.
அந்த நாடுகள் முறைப்படி 1977-ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டன. அதே ஆண்டு சியாப் கூட்டமைப்பு தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவே தற்சமயம் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன.
2003-ஆம் ஆண்டு ஹனோய் - ஹோ சி மின் நகரில் நடைபெற்ற 22-ஆவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது கிழக்கு திமோர், அனுமதிக்கப்பட்டது.
தேசிய ஒலிம்பிக் குழுக்கள் | அறிமுகம் | தேசிய ஒலிம்பிக் குறியீடு | இதர குறியீடுகள் |
---|---|---|---|
புரூணை | 1977 | BRU | BRN |
கம்போடியா | 1961 | CAM | KHM (1972–1976, ISO) |
இந்தோனேசியா | 1977 | INA | IHO (1952), IDN (FIFA, ISO) |
லாவோஸ் | 1959 | LAO | |
மலேசியா | 1959 | MAS | MAL (1952 − 1988), MYS |
மியான்மர் | 1959 | MYA | BIR (1948 – 1988), MMR (ISO) |
பிலிப்பீன்சு | 1977 | PHI | PHL (ISO) |
சிங்கப்பூர் | 1959 | SGP | SIN (1959 – 2016) |
தாய்லாந்து | 1959 | THA | |
கிழக்குத் திமோர் | 2003 | TLS | |
வியட்நாம் | 1959 | VIE | VET (1964), VNM (1968–1976) |
ஆண்டு | விளையாட்டு | பொறுப்பு நாடு (நகரம்) |
---|---|---|
1959 | I | பாங்காக் |
1961 | II | யங்கோன் |
1963 | ரத்து செய்யப்பட்டது | புனோம் பென் |
1965 | III | கோலாலம்பூர் |
1967 | IV | பாங்காக் |
1969 | V | யங்கோன் |
1971 | VI | கோலாலம்பூர் |
1973 | VII | சிங்கப்பூர் |
1975 | VIII | பாங்காக் |
ஆண்டு | விளையாட்டு | பொறுப்பு நாடு (நகரம்) |
---|---|---|
1977 | IX | கோலாலம்பூர் |
1979 | X | ஜகார்த்தா |
1981 | XI | மணிலா |
1983 | XII | சிங்கப்பூர் |
1985 | XIII | பாங்காக் |
1987 | XIV | ஜகார்த்தா |
1989 | XV | கோலாலம்பூர் |
1991 | XVI | மணிலா |
1993 | XVII | சிங்கப்பூர் |
1995 | XVIII | சியாங் மாய் நகரம்2 |
1997 | XIX | ஜகார்த்தா |
1999 | XX | பண்டார் ஸ்ரீ பகவான் |
2001 | XXI | கோலாலம்பூர் |
2003 | XXII | ஹனோய் - ஹோ சி மின் நகரம்3 |
2005 | XXIII | மணிலா |
2007 | XXIV | நாகோன் ரட்சசிமா5 |
2009 | XXV | வியஞ்சான் |
2011 | XXVI | ஜகார்த்தா - பலெம்பாங்6 |
2013 | XXVII | நைப்பியிதோ |
2015 | XXVIII | சிங்கப்பூர்[2] |
2017 | XXIX | கோலாலம்பூர் |
2019 | XXX | டாவோ நகரம் |
ஆசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் முந்தைய தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் பதக்க அட்டவணைகளை வைத்து இருந்த பிற காப்பகத் தளங்களின் தரவுகளைச் சமநிலைப் படுத்திய பிறகு இந்த அட்டவணை சரி செய்யப்பட்டது. மேற்கூறிய தளங்களில் இருந்து சில தகவல்கள் விடுபட்டு உள்ளன அல்லது புதுப்பிக்கப் படவில்லை.[3][4][5][6][7][8]
நிலை | தேசிய ஒலிம்பிக் குழுக்கள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | தாய்லாந்து (THA) | 1885 | 1930 | 1943 | 5758 |
2 | இந்தோனேசியா (INA) | 1824 | 1703 | 1780 | 5307 |
3 | மலேசியா (MAS)[2] | 1303 | 1273 | 1685 | 4261 |
4 | பிலிப்பீன்சு (PHI) | 1067 | 1193 | 1477 | 3737 |
5 | சிங்கப்பூர் (SGP) | 947 | 1002 | 1363 | 3312 |
6 | வியட்நாம் (VIE)[3] | 928 | 967 | 991 | 2886 |
7 | மியான்மர் (MYA)[4] | 564 | 741 | 992 | 2297 |
8 | கம்போடியா (CAM)[5] | 69 | 115 | 258 | 442 |
9 | லாவோஸ் (LAO) | 69 | 93 | 319 | 481 |
10 | புரூணை (BRU) | 14 | 55 | 163 | 232 |
11 | கிழக்குத் திமோர் (TLS) | 3 | 6 | 26 | 35 |
மொத்தம் (11 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்க்கள்) | 8673 | 9078 | 10997 | 28748 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.