![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Dmitry_Medvedev_govru_official_photo_2.jpg/640px-Dmitry_Medvedev_govru_official_photo_2.jpg&w=640&q=50)
திமீத்ரி மெத்வேதெவ்
From Wikipedia, the free encyclopedia
திமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ் (Dmitry Anatolyevich Medvedev, உருசியம்: Дми́трий Анато́льевич Медве́дев; பிறப்பு: 14 செப்டம்பர் 1965) உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும்,[2][3][4] 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 2020 சனவரி 15 இல் மெத்வேதெவ் அவரது அமைச்சரவையைக் கலைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இவரது இடத்திற்கு மிகைல் மிசூசுத்தின் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் இவரை பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக நியமித்தார்.[5]
திமீத்ரி மெத்வேதெவ் Dmitry Medvedev | |
---|---|
![]() | |
துணைத் தலைவர், பாதுகாப்புப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 சனவரி 2020 | |
தலைவர் | விளாதிமிர் பூட்டின் |
உருசியத் தலைமை அமைச்சர் | |
பதவியில் 8 மே 2012 – 16 சனவரி 2020 | |
குடியரசுத் தலைவர் | விளாதிமிர் பூட்டின் |
Deputy | விக்தர் சூப்கொவ் ஈகர் சுவாலொவ் அந்தோன் சிலுவானொவ் |
முன்னையவர் | விளாதிமிர் பூட்டின் |
பின்னவர் | மிகைல் மிசூசுத்தின் |
உருசியாவின் அரசுத்தலைவர் | |
பதவியில் 7 மே 2008 – 7 மே 2012 | |
பிரதமர் | விளாதிமிர் பூட்டின் |
முன்னையவர் | விளாதிமிர் பூட்டின் |
பின்னவர் | விளாதிமிர் பூட்டின் |
உருசியா-பெலருஸ் ஒன்றியப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 18 சூலை 2012 – 16 சனவரி 2020 | |
செயலாளர்-நாயகம் | பவேல் பரோதின் |
முன்னையவர் | விளாதிமிர் பூட்டின் |
பின்னவர் | மிகைல் மிசூசுத்தின் |
ஐக்கிய உருசியாவின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2012 | |
செயலாளர்-நாயகம் | அந்திரே துர்ச்சாக் |
முன்னையவர் | விளாதிமிர் பூட்டின் |
உருசியாவின் முதல் துணைத் தலைமை அமைச்சர் | |
பதவியில் 14 நவம்பர் 2005 – 12 மே 2008 Serving with செர்கே இவனோவ் | |
பிரதமர் | மிகைல் பிராத்கொவ் விக்தர் சூப்கொவ் |
முன்னையவர் | மிகைல் கசியானொவ் |
பின்னவர் | விக்தர் சூப்கொவ் ஈகர் சுவாலொவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திமீத்ரி அனத்தோலியேவிச் மெத்வேதெவ் 14 செப்டம்பர் 1965 (1965-09-14) (அகவை 58) லெனின்கிராது, சோவியத் ஒன்றியம் (இன்றைய சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா) |
அரசியல் கட்சி | கம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்) சுயேச்சை (1991–2011)[1] ஐக்கிய உருசியா (2011–இன்று) |
துணைவர் | சிவெத்லானா லின்னிக் (தி. 24 திசம்பர் 1993) |
பிள்ளைகள் | 1 |
கல்வி | லெனின்கிராது அரசுப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | ![]() |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
இவருக்கு முன்னதாகவும் பின்னதாகவும் அரசுத்தலைவராக இருந்த விளாதிமிர் பூத்தினை விட மெத்வேதெவ் மிகவும் தாராளவாதியாக அறியப்பட்டவர். இவர் அரசுத்தலைவராக இருந்த காலத்தில் உருசியாவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நவீனமயமாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மட்டும் நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது குறைக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில், அணுவாயுதக் குறைப்புத் திட்டத்திற்கான உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது. உருசியாவுக்கும் சியார்சியாவுக்கும் இடையில் 2008 போரில் உருசியா வெற்றி கண்டது. உருசியா பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தில் இருந்து மீண்டது. மெத்வேதெவ் கணிசமான சட்ட அமலாக்க சீர்திருத்தத்தைத் தொடங்கினார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதிலும், ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
மெத்வேதெவ் உருசிய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் இயக்குநர் அவைத் தலைவராகவும் 2000-ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.[6].