![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/Wikipedia-logo-v2-ta.svg/langta-640px-Wikipedia-logo-v2-ta.svg.png&w=640&q=50)
தமிழ் விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவின் தமிழ் மொழிப் பதிப்பு / From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 30 மே 2024 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[2] 1,65,630 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,33,069 ஆவர்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
![]() தமிழ் விக்கிபீடியாவின் இலட்சினை | |
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | திறந்த படிப்பு அணுகல். பொது திருத்தத்திற்கு பதிவு தேவையில்லை, ஆனால்
|
பயனர்கள் | 2,33,069 |
உள்ளடக்க உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/ பகிர்வுரிமை 3.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது) ஊடக உரிமம் மாறுபடும் |
வெளியீடு | செப்டம்பர் 2003; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2003-09) |
உரலி | ta |
மூடு
இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26-நவம்பர்-2023 அன்று 64 ஆவது இடத்தில் இருந்தது.[3]