From Wikipedia, the free encyclopedia
தமிழர் தொழினுட்பம் என்பது தமிழர் பங்களித்து பயன்படுத்தும் பல் துறை சார் தொழில்நுட்பங்களைக் குறிக்கும். 16 ம் நூற்றாண்டு அறிவியல் புரட்சி வரைக்கும் தமிழர் தொழினுட்பம் ஏனைய நாகரிகங்களுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. வேளாண்மை, கட்டிடக்கலை, இசைக்கருவிகள், மருத்துவம், கப்பற்கலை, போர்க்கலை என பல துறைகளில் தமிழர் தொழினுட்பம் சிறந்து இருந்தது.
தமிழர்களின் தொழில்நுட்ப வரலாற்றினை, தமிழ் இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் , தொல்லியல் ஆய்வுகள், நடப்பில் உள்ள கலைகள் உட்பட்ட பல்வேறு சான்றுகள் ஊடாக தொகுக்க முடியும். தமிழர்களின் பண்டைய உயர்ந்த தொழில்நுட்பத் திறனை கீழடி தொல்லியல் களம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் உட்பட்ட தொல்லிய ஆய்வுகளும், இலக்கியக் குறிப்புகளும் வலுவாக நிறுவியுள்ளன. கீழடி தொல்லியல் கள ஆய்வுகள் சங்க கால கட்டிடத்தொகுதிகள், சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், உறை கிணறுகள், நான்கு வகையான செங்கற்கள், பல்வேறு வகை மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், பல்வகை அரிய தொல்பொருட்கள் தமிழர்களின் தொழினுட்பம் வளர்ச்சியடைந்த ஒரு நகர வாழ்கைக்கு உதவியை நிறுவியுள்ளன. இடைக் காலத்தில் நிலவிய சோழப் பேரரசு, கட்டிடக்கலை, சிற்பக்கலை, கப்பற்கலை, புவியியல் என்று பல்வேறு துறைகளில் ஒரு உயரிய இடத்தை எட்டியது.
{{cite book}}
: CS1 maint: location (link)Seamless Wikipedia browsing. On steroids.