![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Lionel_Messi%252C_2011.jpg/640px-Lionel_Messi%252C_2011.jpg&w=640&q=50)
தங்கப் பந்து (பிஃபா)
From Wikipedia, the free encyclopedia
பிஃபா தங்கப் பந்து (FIFA Ballon d'Or,பிரெஞ்சு உச்சரிப்பு: [balɔ̃ dɔʁ], பிஃபா பாலோன் தி'ஓர்) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர். [1][2]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Lionel_Messi%2C_2011.jpg/640px-Lionel_Messi%2C_2011.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Sepp_Blatter_at_signing_of_agreement_creating_FIFA_Ballon_d%E2%80%99Or_in_Johannesburg_2010-07-05_2.jpg/640px-Sepp_Blatter_at_signing_of_agreement_creating_FIFA_Ballon_d%E2%80%99Or_in_Johannesburg_2010-07-05_2.jpg)
பிரெஞ்சுக் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான தங்கப் பந்து (பிஃபா) விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.