டேவிட் பென்-குரியன்
From Wikipedia, the free encyclopedia
டேவிட் பென்-குரியன் (David Ben-Gurion, அக்டோபர் 16, 1886 - டிசம்பர் 1, 1973) இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் சிடே போக்கர் (Sde Boker) என்னும் பாலைவனப் பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் அந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.
விரைவான உண்மைகள் டேவிட் பென்-குரியன் דָּוִד בֶּן-גּוּרְיּוֹן, 1st இஸ்ரேல் பிரதமர் ...
டேவிட் பென்-குரியன்
דָּוִד בֶּן-גּוּרְיּוֹן | |
---|---|
1st இஸ்ரேல் பிரதமர் | |
பதவியில் 2 நவமொஅர் 1955 – 21 ஜூன் 1963 | |
முன்னையவர் | மோஷே ஷாரெட் |
பின்னவர் | லேவி எஷ்கோல் |
பதவியில் 14 மே 1948 – 7 டிசம்பர் 1953 | |
முன்னையவர் | இல்லை |
பின்னவர் | மோஷே ஷாரெட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1886-10-16)16 அக்டோபர் 1886 Płońsk, போலந்து (ரஷ்யப் பேரரசு) |
இறப்பு | 1 திசம்பர் 1973(1973-12-01) (அகவை 87) இஸ்ரேல் |
அரசியல் கட்சி | Mapai, ராஃபி, தேசியப் பட்டியல் |
மூடு