பழங்கால மனிதர்களின் தொல்லியல் மேடு From Wikipedia, the free encyclopedia
அகழ்வாய்வில் டெல் அல்லது பண்டைய தொல்லியல் மேடு ( tell, or tel) அரபு மொழி: تَل, tall or எபிரேயம்: תל tell), டெல் என்பதற்கு அரபு மொழியில் மலை அல்லது உயரமான மேடு ('hill' or 'mound') எனப்படும்.[1][2] ஒரே நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட கட்டிட அமைப்புகள் பின்னர் சிதிலமடைந்து உயரமான மண் மேடுகள் போன்று காட்சியளிப்பவைகள் தொல்லியல் மேடு எனப்படும்.[3]40 மீட்டர் உயரம் கொண்ட டெல் பராக் தொல்லியல் மேட்டை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளனர். [4]
பொதுவாக டெல் எனப்படுவது, பண்டைய அண்மை கிழக்கு தொடர்பான அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடுகளை குறிக்கும்.[5] [6][7][8][9] டெல் என அழைக்கப்படும் பண்டைய தொல்லியல் மேடுகள் அதிகமாக, மக்கள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை தொடர்ந்து வாழ்ந்து வரும் மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, தெற்கு லெவண்ட், அனதோலியா மற்றும் ஈரான் போன்ற நிலப்பரப்புகளில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
டெல் எனப்படும் தொல்லியல் மேடுகள், இப்பகுதிகளில் பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வாழ்ந்து வந்த மனிதர்கள் களிமண் மற்றும் செங்கல் கட்டிட அமைப்புகளின் சிதிலமடைந்த மணல் மேடாகும்.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.