சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை (Sir John Lionel Kotelawala, (சிங்களம்: ශ්‍රිමත් ජොන් ලයනල් කොතලාවල; 4 ஏப்ரல் 1895 – 2 அக்டோபர் 1980) இலங்கைப் படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1953 முதல் 1956 இலங்கையின் மூன்றாவது பிரதமராகப் பதவியில் இருந்தார்.

விரைவான உண்மைகள் ஜெனரல் மேதகுசேர் ஜோன் லயனல் கொத்தலாவலைSir John Lionel Kotelawala, இலங்கைப் பிரதமர் ...
ஜெனரல் மேதகு
சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை
Sir John Lionel Kotelawala
Thumb
இலங்கைப் பிரதமர்
பதவியில்
12 அக்டோபர் 1953  12 ஏப்ரல் 1956
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்டட்லி சேனாநாயக்க
பின்னவர்சாலமன் பண்டாரநாயக்கா
இலங்கை நாடாளுமன்றம்
for தொடகஸ்லாந்தை
பதவியில்
14 அக்டோபர் 1947  19 மார்ச் 1960
பின்னவர்ஏ. யூ. ரொமானிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-04-04)4 ஏப்ரல் 1895
இலங்கை
இறப்பு2 அக்டோபர் 1980(1980-10-02) (அகவை 85)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் கல்லூரிகிறைஸ்டுக் கல்லூரி, கேம்பிரிட்ச்,
கொழும்பு றோயல் கல்லூரி
தொழில்அரசியல்வாதி, இராணுவவீரர், பெருந்தோட்டக்காரர்
Military service
பற்றிணைப்புஇலங்கை
கிளை/சேவைஇலங்கை பாதுகாப்புப் படை,
இலங்கைத் தரைப்படை
சேவை ஆண்டுகள்23 ஆண்டுகள்
தரம்செனரல் (இஅங்கை இராணுவம்),
கேணல் (இலங்கை பாதுகாப்புப் படை)
அலகுஇலங்கை காலாட்படை
மூடு

ஆரம்ப வாழ்க்கை

Thumb
சேர் ஜோனின் தந்தை ஜோன் கொத்தலாவலை, மூத்தவர்

ஜோன் கொத்தலாவலை ஒரு வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஜோன் கொத்தலாவலை (மூத்தவர்) இலங்கை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். தாயார் அலீசு ஆட்டிகலை. ஜோன் 11 வயதாக இருக்கும் போது ஒரு கொலைக் குற்றச்சாட்டை அடுத்து தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பௌத்தராக இருந்த தாயார் கிறித்தவத்துக்கு மதம் மாறினார். தமது நிலங்களையும் காரீய சுரங்கங்களையும் முறையாக மேலாண்மை செய்ததன் மூலம் அவர் பெரும் சொத்துக்களை ஈட்டினார். அவரது சமூக சேவைகளுக்காக அவருக்கு பிரித்தானிய அரசின் விருது கிடைத்தது.

ஜோன் கொத்தலாவலை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டில் விடுதலைக்கு ஆதரவான சில நடவடிக்கைகளில் பங்குபற்றியமையால் பாடசாலையை விட்டு விலக நேரிட்டது. அதன் பின்னர் ஐரோப்பா சென்றார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இங்கிலாந்திலும், பிரான்சிலும் ஐந்தாண்டுகள் வரை தங்கியிருந்தார். அக்காலத்தில் கேம்பிட்சுப் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார்.

இளம் வயதில் துடுப்பாட்டம் உட்படப் பலவித விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலங்கை திரும்பிய அவர் தமது குடும்பத்தின் தோட்டங்களை நிருவகித்து வந்தார்.

ஜோன் கொத்தலாவலை எஃபி டயசு பண்டாரநாயக்கா என்பவரைத் திருமணம் புரிந்து பின்னர் மணமுறிப்புப் பெற்றார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.