ஜெசிகா சாஸ்டெய்ன்
அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜெசிகா மிசெல் சாஸ்டெய்ன் (ஆங்கிலம்: Jessica Michelle Chastain; பிறப்பு மார்ச் 24, 1977) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பெண்ணிய கருப்பொருளை அடிப்படையாக கொண்ட படங்களில் நடித்ததற்காக பெரிதும் அறியப்பட்டார். கோல்டன் குளோப் விருது மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது உள்ளிட்ட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் 2012 இல் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஜெசிகா சாஸ்டெய்ன் Jessica Chastain | |
---|---|
2015 இல் ஜெசிகா சாஸ்டெய்ன் | |
பிறப்பு | ஜெசிகா மிசெல் சாஸ்டெய்ன் மார்ச்சு 24, 1977 (1977-03-24) (அகவை 47) சேக்ரமெண்டோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | சூலியார்டு பள்ளி, கலையிற்கான இளங்கலை பட்டம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | கியான் லூகா பாசி தெ பிரெபொசுலோ (தி. 2017) |
பிள்ளைகள் | 2 |
கலிபோர்னியாவில் உள்ள சாக்ராமெண்டோவில் பிறந்து வளர்ந்த சாஸ்டெய்ன், சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டினார். 1998 இல், ஷேக்ஸ்பியரின் ஜூலியட்டாக தனது தொழில்முறை நடிகையாக அறிமுகமானார். ஜூலியார்ட் பள்ளியில் நடிப்பைப் படித்த பிறகு, அவர் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஜான் வெல்ஸுடன் திறமையை மெய்ப்பிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். லா & ஆர்டர்: ட்ரையல் பை ஜூரி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் அவர் தொடர்ந்து நட்சத்திர விருந்தினராக இருந்தார். 2004ம் ஆண்டில் ஆண்டன் செக்கோவின் நாடகமான தி செர்ரி ஆர்ச்சர்ட் மற்றும் 2006 இல் ஆஸ்கார் வைல்டின் சோகம் சலோமின் மேடை நாடகங்களிலும் அவர் பாத்திரங்களை ஏற்றார்.
ஜோலீன் (2008) என்ற நாடகம் திரைப்படமானபோது அதில் சாஸ்டைன் அறிமுகமானார். மேலும், தி ஹெல்ப் (2011), இன்டர்ஸ்டெலர் (2014), த மார்சன் (2015) ஆகிய திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.
திரைப்படத்தில் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஃப்ரீக்கிள் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சாஸ்டெய்ன் உருவாக்கினார். அவர் மனநலப் பிரச்சினைகள் மற்றும் பாலினம் மற்றும் இன சமத்துவம் குறித்து அதில் பேசினார். அவர் ஃபேஷன் டிசைனர் ஜியான் லூகா பாஸி டி ப்ரெபோசுலோவை மணந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.