ஜிக்கி
பிரபல, இந்திய, பன்மொழி திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் நடிகை. / From Wikipedia, the free encyclopedia
ஜிக்கி (Jikki, 3 நவம்பர் 1935 - 16 ஆகத்து 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவியாவார்.
விரைவான உண்மைகள் ஜிக்கி, பின்னணித் தகவல்கள் ...
ஜிக்கி | |
---|---|
![]() ஜிக்கி 1940களின் இறுதியில் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பி. ஜி. கிருஷ்ணவேணி |
பிறப்பு | (1935-11-03)3 நவம்பர் 1935 சென்னை |
இறப்பு | 16 ஆகத்து 2004(2004-08-16) (அகவை 68) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | திரைப்பட பின்னணி பாடகர் |
இசைத்துறையில் | 1948 முதல் 2002 |
மூடு