ஜகதிஷ் முகீ (பிறப்பு 1 டிசம்பர் 1942) என்பவர் அசாம் மாநில ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் அந்தமான் மற்றும் நிகோபர் ஒன்றியப் பகுதியின் ஆளுநராகவும் டெல்லி அரசின் நிதி, திட்டமிடல், மசோதா மற்றும் வரிவிதிப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஜகதீஷ் முகீ, அசாம் மாநில ஆளுநர் ...
ஜகதீஷ் முகீ
Thumb
அசாம் மாநில ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 அக்டோபர் 2017
முன்னையவர்பன்வாரிலால் புரோகித்
அந்தமான் மற்றும் நிகோபர் ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநர்
பதவியில்
22 ஆகத்து 2016  7 அக்டோபர் 2017
முன்னையவர்ஏ. கே. சிங்
பின்னவர்தேவேந்திர குமார் ஜோஷி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜகதீஷ் முகீ

1 திசம்பர் 1942 (1942-12-01) (அகவை 81)
பஞ்சாப், பாகிஸ்தான்
தேசியம்இந்தியா
வாழிடம்(s)ராஜ் பவன், குவகாத்தி
கல்விபட்டயம் (நிதி)/ முதுகலை (வணிகவியல்)
முன்னாள் கல்லூரிகுருசேத்திர பல்கலைக்கழகம்
தில்லி பல்கலைக்கழகம்
மூடு

தொடக்ககால வாழ்க்கை

இவர் 1942 இல் தற்போது பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள அன்றைய பிரித்தானியாவின் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் தேஜா காஜி கான் என்ற இடத்தில் ஒரு பஞ்சாபிய இந்து குடும்பத்தில் பிறந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவர் 4 வயதில் தன் குடும்பத்துடன் இந்தியாவில் உள்ள சோனாவிற்கு இடம்பெயர்ந்தார்.

1965-ல் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் நகரில் உள்ள ராஜ் ரிஷி கல்லூரி கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார், தொடர்ந்து 1967 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக் கழகத்திலிருந்து M. Com பட்டமும் பெற்றார். அரசியலில் நுழைவதற்கு முன்பு இவர் தில்லி பல்கலைக் கழகத்தின் ஷஹீத் பகத் சிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, பயிற்சிக்குப் பின் ராஜினாமா செய்தார். இவருக்கு அக்டோபர் 1995 ல் குருசேத்ரா பல்கலைக்கழகத்தில் இருந்து நிதியியல் துறையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

அரசியல் வாழ்க்கை

மத்திய உள்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இவருக்கு நாட்டின் சிறந்த திட்டமிடல் அமைச்சர் விருது வழங்கினார். இரண்டு முறை இவர் டெல்லி சட்டமன்றத்தின் சிறந்த உறுப்பினர் விருதும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டு தொடங்கி ஜானக் பூரி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அதே தொகுதியில் இருந்து ஏழு முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார், ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார், அத்தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராஜேஷ் ரிஷிக்கு எதிராக 25000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பா.ஜ.க.வில் அனைத்து மட்டங்களிலும் அவர் பணிபுரிந்தார்.

அரியானாவின் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அவரது செயல்திறன் பாராட்டப்பட்டது. அதன்மூலம் அரியானாவில் பாஜக முதலமைச்சர் ஒருவர் முதன்முறையாக எந்தக் கட்சியின் ஆதரவுமின்றி தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றார்.[1][2][3]

இவர் அந்தமான் மற்றும் நிகோபார் ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநராக ஆகஸ்டு 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பிறகு செப்டம்பர் 2017ஆம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சர்ச்சைகள்

ஏப்ரல் 2004ம் ஆண்டு தென் டெல்லி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.கே. ஆனந்த்,என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பா.ஜ.க தலைவர் ஜக்திஷ் முகீ, ஒரு பத்திரிகை மாநாட்டில் தன்மீது நடத்தை மற்றும் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நடத்தியதாக விமர்சித்து இருந்தார். [4]

மார்ச் 2008-ல், மூன்று நாட்கள் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றபோது, ஆர்.எஸ்.எஸ் தொழிலாளர்கள் தங்கள் கட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சித் தோழர்களுடன் மோதினர். இந்தத் தாக்குதலில் சிபிஎம் ஜக்திஷ் முகீ மற்றும் தில்லி மேயர் ஆர்தி மெகரா ஆகியோர் ஈடுபட்டதாக சிபிஎம் கூறியது. இந்த சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் பிரிவினர் ஈடுட்டத்தை காவலர்கள் உறுதிப்படுத்தினர். [5][6]

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்த போது, பேராசிரியர் முகீ பெரும் வியப்பை ஏற்படுத்தினார். இவர் தன் பிரமாணப் பத்திரத்தில் 1.1 கிலோ தங்கம், 10 கிராமுக்கு 175 ரூபாய் என்ற கணக்கில் குறிப்பிட்டு இருந்தார். இது உண்மையான மதிப்பினை விட 100 மடங்கு குறைவாகும். அதேபோல, ஜனக் புரியில் உள்ள தனது சி -4 சி பிளாக்கின் (ஒரு நடுத்தர 2-படுக்கையறை கொண்ட குடியிருப்பு) மதிப்பு ரூ. 21,500 என்று குறிப்பிட்டு இருந்தார். இது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அசல் விலை ஆகும்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.