சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (Communist Party of the Soviet Union, உருசியம்: Коммунисти́ческая па́ртия Сове́тского Сою́за, ஒ.பெ கம்யூனிஸ்தீசெஸ்கயா பார்த்தியா சவித்ஸ்கவ சயூசா), சுருக்கமாக ஆங்கிலத்தில் CPSU எனப்படுவது,(உருசியம்: КПСС, ஒ.பெ கபஎஸ்எஸ்){{efn| சிலவேளைகளில் சோவியத் பொதுவுடைமைக் கட்சி எனவும் வழங்கியது(SCP), தான் இருந்த காலத்தில் கீழவரும் நான்கு பெயர்களில் நிலவியது:

  • உருசியச் சமவுடைமை மக்களாட்சி தொழிலளர் கட்சி (போல்செவிக்) (1912–1918) ( உருசியம் РСДРП(б) ஆங்கிலத்தில்: RSDLP அல்லது சிலவேளைகளில் RSDRP)
  • உருசியப் பொதுவுடைமைக் கட்சி (போல்செவிக்) (1918–1925) ( உருசியம் РКП ஆங்கிலத்தில்: RKP அல்லது RCP)
  • அனைத்து ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (போல்செவிக்) (1925–1952) (உருசியம் ВКП(б) or ВКПб; ஆங்கிலத்தில்: VKP(b), VKPb, VCP(b), VCPb, AUCP(b))
  • சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1952–1991) ( உருசியம்: КПСС; ஆங்கிலத்தில்: CPSU அல்லது KPSS)
விரைவான உண்மைகள் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி, நிறுவனர் ...
சோவியத் ஒன்றியப்
பொதுவுடைமைக் கட்சி
Коммунистическая партия
Советского Союза
நிறுவனர்விளாதிமிர் லெனின்
குறிக்கோளுரை«Пролетарии всех стран, соединяйтесь!»
("உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!")
தொடக்கம்ஜனவரி 1912
as RSDLP(b)
மார்ச்1918
as RCP(b)
திசம்பர் 1925
as VKP(b)
அக்தோபர் 1952
as CPSU
முன்னர்உ ச ச தொ க (RSDLP)
பின்னர்De jure:
ஏதும் இல்லை
தாமே அறிவித்தவை:
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1992)
செய்தி ஏடுபிராவ்தா
இளைஞர் அமைப்புகொம்சொமால்
இளைஞர் முன்னோடிகள்
படைப் பிரிவுசோவியத் சமவுடைமை குடியரசு ஒன்றியப் படைகள்
உறுப்பினர்19 மில்லியன் (1986)
கொள்கைபொதுவுடைமை
மார்க்சியம்–லெனினியம்
அரசியல் நிலைப்பாடுமீ இடதுசாரி அரசியல்
பன்னாட்டு சார்புஇரண்டாம் அனைத்துலகம் (1912–1914)[1]
காமின்டெர்ன் (1919–1943)
காமின்பார்ம் (1947–1956)
நிறங்கள்     சிவப்பு
பண்" அனைத்துலகம்"
மூடு
Thumb
சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்

சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1952–1991) ( உருசியம்: КПСС; ஆங்கிலத்தில்: CPSU அல்லது KPSS) என்பது சோவியத் ஒன்றியத்தை நிறுவி ஆட்சிபுரிந்த சோவியத் ஒன்றிய அரசியல் கட்சியாகும். இது 1990 வரை சோவியத் ஒன்றியத்தை ஆண்ட ஒரே கட்சியாகும்.சோவியத்து மக்கள் துணைவர்களின் பேராயம் சோவியத் அரசியலமைப்பின் 6 ஆம் சட்டப்பிரிவைத் திருத்திச் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சிக்கு அரசியல் தலைமைத் தந்ததும், 1912 இல் உருசிய சமூகச் சனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஒருபிரிவினராகிய போல்செவிக்குகளும் இலெனின் தலைமையிலாண புரட்சிக் குழுவும் 1917 அக்தோபர் புரட்சிக்குப் பிறகு அதிகாரத்தைக் கையில் எடுத்தனர். 1991 படைத்தலைமை கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றி சோவியத் ஒன்றியத்தை வீழ்த்தியதும், சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி 1991 ஆகத்து 29 இல் சோவியத் பகுதிக்குள் கலைக்கப்பட்டது. இந்தக் கட்சி பின்னர் 1991 நவம்பர் 6 இல் முழுமையாக உருசிய நாட்டில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், புதிய அரசியல் தலைமை உலகின் மிகப் பெரிய படைகளையும் தன் அதிகாரத்தின்கீழ் கொணர்ந்தது.

சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மக்களாட்சி நடுவண்நிலையை (democratic centralism) நெறிமுறையாக ஏற்ற பொதுவுடைமைக் கட்சியாகும். இந்நெறிமுறைப்படி பொதுச் சிக்கலகள் கட்சியில் திறந்தமுறையில் விவாதித்து முடிவெடுக்கப்படும். முடி வில் ஏற்கப்பட்ட கொள்கைகள் பின் ஒரே மனதாகக் கட்சி முழுவதிலும் கடைபிடிக்கப்படும். இக்கட்சியின் மிக உயரிய அமைப்பு, சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பேராயம் ஆகும்; இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும். பேராயம் நடக்காதபோது கட்சியின் நடுவண்குழுவே மிக உயரிய அமைப்பு ஆகும். நடுவண்குழுவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே கூடுவதால், பெரும்பாலான அன்றாடக் கடமைகளும் பொறுப்புகளும் கட்சியின் அரசையல் குழுவிடமும் கட்சித் தலைமிச் செயற்குழுவிடமும் நிறுவனக் குழுவிடமும் (1952 வரை) விடப்படும். கட்சித் தலைவரே அரசின் தலைமைப் பொறுப்பையும் ஏற்பார். இவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் சோவியத் ஒன்றிய முதன்மை அமைச்சர் பதவியையும் அரசின் தலைமையையும் ஏற்பார் அல்லது இம்மூன்றில் சிலவற்றை மாறி மாறி ஆனால் மூன்றையும் நேரத்தில் அல்ல, ஏற்பார். கட்சித் தலைவரே கட்சி அரசியல் குழுவின் தலைவரும் சோவியத் ஒன்றியத்தின் முதன்மைச் செயல்தலைவரும் ஆவார். கட்சிக்கும் அரசுக்கும் (சோவியத் ஒன்றிய அமைச்சர்களின் மன்றத்துக்கும்) இடையிலான அதிகாரக் குவிமைய மாற்றம் குறித்த tension எப்போதும் தீவு காணாமலே இருந்தது; ஆனால், நடப்பில் கட்சியே ஓங்கலான அதிகாரத்தைச் செலுத்தியது. எப்போது வல்லமை மிக்க தலைவர் இருந்துகொண்டே இருந்தனர்(முதலில் இலெனினும் பின்னர் கட்சிப் பொதுச் செயலாளரும் தலைவராக இருந்தனர்).

சோவியத் ஒன்றியம் 1922 இல் உருவாக்கப்பட்ட்தும், இலெனின் கலப்புப் பொருளியலை அறிமுகப்படுத்தினார். இது புதிய பொருளியல் கொள்கை என வழங்கியது. இது பொதுவுடைமை ஆட்சி அதிகாரத்தின்கீழ் முதலாளிய நடைமுறைகளும் விளங்க ஒப்புதல் வழங்கியது. இக்கொள்கை வளாராத சோவியத் ஒன்றியத்தில் நடைமுறையில் சமவுடைமையை வென்றெடுக்கும் சூழ்நிலைமைகளை ஏற்படுத்த உதவியது. ஜோசப் இசுட்டாலின் 1929 இல் கட்சித் தலைவராகியதும், மார்க்சின் எண்னக்கருக்களும் இலெனின் எண்ணக்க்கருக்களும் இணைத மார்க்சிய-லெனினியம் கட்சியின் வழிகாட்டும் கருத்தியல் ஆக மாறி கட்சி உள்ளவரை நிலவியது. கட்சி அரசு சமவுடைமையைக் கடைப்பிடித்தது. இதன்படி, அனைத்து தொழிலகங்களும் நாட்டுடைமை ஆகின, திட்டமிட்ட பொருளியல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் இருந்து மீட்சி பெற்றதும், இசுட்டாலின் கொள்கைகள் நீக்கப்பட்டு சோவியத் பொருளியல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இது 1965 சோவியத் பொருளியல் சீர்திருத்தம் என வழங்கியது. இப்போது குருச்சேவின் முடுக்கத்தில் சோவியத் சமூக முழுவதிலும் பொதுவாக தாராளப் பொருளியல் அறிமுகமாகியது.

வார்சா உடன்படிக்கை பொதுவுடைமைக் கட்சிகள்

  • பல்கேரியப் பொதுவுடைமைக் கட்சி
  • செக்கோசுலோவாக்கியப் பொதுவுடைமைக் கட்சி
  • செருமானியச் சமவுடைமை ஒற்றுமைக் கட்சி
  • அங்கேரியச் சமவுடைமைத் தொழிலாளர் கட்சி
  • போலந்து ஒன்றியத் தொழிலாளர்க கட்சி
  • உரோமானியப் பொதுவுடைமைக் கட்சி

பிற கட்சிகள்

  • சீனப் பொதுவுடைமைக் கட்சி
  • வியட்நாம் பொதுவுடைமைக் கட்சி
  • [[லாவோ மக்கள் புரட்சிக் கட்சி
  • கொரியத் தொழிலாளர் கட்சி, மார்க்சியம் சாரா பொதுவுடைமைக் கட்சி
  • அல்பேனியத் தொழிலாளர் கட்சி
  • கியூபா பொதுவுடைமைக் கட்சி
  • யூக்கோசுலாவியப் பொதுவுடைமையாளர்கள் குழு

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.