பொன்ராம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சீமராஜா (Seema Raja), பொன்ராமின் இயக்கத்தில், ஆர். டி. இராஜா தயாரிப்பில் 2018 ஆண்டு வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், விவேக் அர்சனின் படத்தொகுப்பிலும், 13 செப்டம்பர் 2018இல் வெளியானது.
'சீமராஜா ' | |
---|---|
சீமராஜா சுவரொட்டி | |
இயக்கம் | பொன்ராம் |
தயாரிப்பு | ஆர். டி. இராஜா |
கதை | பொன்ராம் |
திரைக்கதை | பொன்ராம் |
இசை | டி. இமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | 24ஏஎம் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 13 செப்டம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப்பிறகு, இப்படத்தினை பொன்ராம் இயக்கவுள்ளதாவும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், ஆகத்து 2016இல் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். டி. இராஜா அறிவித்தார்.[1][2] இப்படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2017ஆம் ஆண்டின் தீபாவளிக்கு முன்னர் இப்படம் வெளியிடப்படும் என்றும் ஆர். டி. இராஜா தெரிவித்தார். முந்தையப் படங்களைப்போலவே இப்படத்திற்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், விவேக் அர்சனின் படத்தொகுப்பிலும் இப்படம் படமாக்கப்பட்டது.[3][4] இப்படத்திற்காக சமந்தா சிலம்பம் கற்றார்.[5] சிவகார்த்திகேயனின் மற்ற இரு திரைப்படங்களை விரைந்து முடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.[6] இப்படத்தின் தொடக்க விழா 16 சூன் 2017 இல் சிம்ரன், நெப்போலியன் , லால் ஆகியோருடன் தொடங்கியது.[7][8]
இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.