சிரில்லிக் எழுத்துக்கள்
From Wikipedia, the free encyclopedia
சிரில்லிக் எழுத்துகள் (Cyrillic script, /sᵻrɪlɪk/) என்பது கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா, நடு ஆசியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து முறை ஆகும். இது முதன்முதலாகப் பல்கேரிய பேரரசிலுள்ள பிரெஸ்லவ் (Preslav) இலக்கியப் பள்ளியில், கி. மு.9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால சிரிலிக் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.[2][3][4] தெற்காசியா ஐரோப்பா, வடக்கு ஐரோவாசியா, மற்றும் சிலாவியா அல்லாத மொழிகள் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளிலும், தொன்றுதொட்டு, சிரில்லிக் அகரவரிசை எழுத்துகளே அடிப்படையாக உள்ளன. 2011ல், யூரோசியாவில் சுமார் 252 மில்லியன் மக்கள் சிரில்லிக் எழுத்துக்களைத் தங்கள் தேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியின் எழுத்துகளாகப் பயன்படுத்துகின்றனர். உருசியாவில்பாதிக்கு மேலானோர் சிரில்லிக் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.[5] 2007ஆம் ஆண்டு, சனவரி 1ல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல்கேரியாவை இணைத்த பின், இலத்தீன் எழுத்துகள் மற்றும் கிரேக்க எழுத்துகளைத் தொடர்ந்து, சிரில்லிக் எழுத்துமுறை, ஐரோப்பிய ஒன்றியத்தின்
மூன்றாவது அதிகாரபூர்வமான எழுத்து முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[6]
சிரில்லிக் எழுத்துகள் | |
---|---|
எழுத்து முறை வகை | மொழியின் அகர வரிசை எழுத்துத் தொகுதி
|
காலக்கட்டம் | ஆரம்பகால சிரில்லிக் எழுத்துகள், ஆரம்பகால மாறுபாடுகள் இன்னும் உள்ளன c. 940 |
திசை | Left-to-right |
மொழிகள் | தேசிய மொழியாகப் பயன்படுத்தும் நாடுகள்: பெலருஸ் பொசுனியா எர்செகோவினா (இலத்தீன் மொழியிலும் உள்ளது) பல்கேரியா கசக்கஸ்தான் கிர்கிசுத்தான் மாக்கடோனியக் குடியரசு மங்கோலியா (மங்கோலிய மொழியிலும் உள்ளது) மொண்டெனேகுரோ (இலத்தீன் மொழியிலும் உள்ளது) உருசியா செர்பியா (இலத்தீன் மொழியிலும் உள்ளது) தஜிகிஸ்தான் உக்ரைன் (சிரில்லிக் எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் என்ற பக்கங்களைப் பார்க்கவும்) |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | எகிப்திய ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துகள்[1]
|
நெருக்கமான முறைகள் | இலத்தீன் (Latin) எழுத்துகள் காப்டிக் (Coptic) எழுத்துகள் ஆர்மீனியர்களின் (Armenian) மொழி எழுத்துகள் இங்கிலாந்தின் ஜார்ஜ் ஆற்று (Georgian) மொழி எழுத்துகள் கிளாகோலிதிக் (Glagolitic) மொழி எழுத்துகள் |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Cyrl (220), Cyrillic Cyrs (Old Church Slavonic variant) |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Cyrillic |
ஒருங்குறி வரம்பு |
|
இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும். |
கிரேக்க மொழியின் தொடர்பிலா எழுத்து வடிவங்களிலிருந்து சிரிலிக் எழுத்துகள் பெறப்பட்டன. பழைய கிலாகோலிதிக் (Glagolitic) எழுத்துகளால், எழுத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தக் கூடுதல் எழுத்துகள் மற்றும் பண்டைய மசிதோனிய மொழி உச்சரிப்புகள், கிரேக்கத்தில் காணப்படவில்லை. பைசாந்தியப் பேரரசின் இரண்டு புனிதச் சகோதரர்கள், சிரில் (Cyril) மற்றும் மெத்தோடியஸ் (Methodius) ஆகியோரின் நினைவாக இந்த எழுத்துமுறை சிரிலிக் எழுத்துமுறை என்று பெயரிடப்பட்டுள்ளது.[7] இந்த புனிதச் சகோதரர்கள், கிலாகோலிதிக் எழுத்துக்களை உருவாக்கியவர்கள். சிரில் மற்றும் மெத்தோடியஸின் ஆரம்பகால சீடர்களால் சிரிலிக் உருவாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டதாக நவீன அறிஞர்கள் நம்புகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரஷ்யாவில் சிரிலிக் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது, மேற்கு ஐரோப்பாவில் உள்ள தனது தூதரகத்திலிருந்து திரும்பிய உருசியாவின் முதலாம் பேதுரு சிரிலிக் எழுத்துகளில் அதிக அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டார். புதிய எழுத்துகள், லத்தீன் எழுத்துகளை ஒத்திருந்தன. பல பழைய வழக்கொழிந்த எழுத்துகள் நீக்கப்பட்டன. பல எழுத்துகள் தனிப்பட்ட முறையில் பேதுருவால் சேர்க்கப்பட்டன. உதாரணம்: Я லத்தீன் மொழியின் ஆர் (R) மூலம் பதிலியிடப்பட்டது. மேற்கு ஐரோப்பிய அச்சுக்கலைப் பண்பாட்டு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8]