From Wikipedia, the free encyclopedia
சிறிய நீர்க்காகம் (Microcarbo niger, little cormorant), கரண்டம், அர்க்கம்[1] என்றழைக்கப்படும் பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது. தெற்கு பாகிஸ்தானில் தொடங்கி இந்தியா, இலங்கை வழியே கிழக்கு இந்தோனேசியா வரை இதன் இனப்பெருக்க வாழ்விடங்கள் அமைந்துள்ளன. நன்னீர் ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்றிலிருந்து ஐந்து முட்டைகள் வரை இடும். 55 செ.மீ வரை வளரும் இவை நீர்க்காக வகைகளில் மிகச்சிறியவை. செவ்வக வடிவத்தலை, சிறிய அலகு ஆகிய குணநலன்கள் இப்பறவையை கொண்டை நீர்க்காகத்திலிருந்து (Indian Cormorant or Shag) வேறுபடுத்திக் காட்டுகின்றன.
நீர்க்காகம் | |
---|---|
அக்கறை வேண்டாதவை LC (iucn.1) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Microcarbo |
இனம்: | M. niger |
இருசொற் பெயரீடு | |
Microcarbo niger லூயி ழான் பியர் வியிலோ (Louis Jean Pierre Vieillot), 1817 | |
அதிக எண்ணிக்கையில் காணப்படும் சிறிய நீர்க்காகங்கள் சிவப்புப் பட்டியலில் அக்கறை வேண்டாதவை பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள்:[3]
அலகின் இருபுறமும் குஞ்சம் வைத்தாற்போல் கரும் முள்மயிர்களும் வெண்ணிற கண்ணிமை முடியும் காணப்பட்டன; கன்றிப்போன கண்ணிமைகளும் பதிவு செய்யப்பட்டன.
நீர்க்காகங்கள் தம் கூடுகளை குருட்டுக் கொக்குகள், சிறுவெண் கொக்குகளுடன் கட்டுகின்றன (அதாவது, அதே மரங்களில்); பிற பறவை ஆய்வாளர்களின் முடிவுகளில் கொக்குகள், பாம்புத்தாராக்கள், நாரைகள், வெளவால்கள் ஆகியவற்றுடன் கூடுகளைக் கட்டுவதாகத் தெரிகின்றது.
கொண்டைவாகை (Albizia procera), மா (Mangifera indica), அரச மரம் (Ficus spp.), குட்டிப்பலா (அ) பிராய் (Strebulus asper), தென்னை (Cocos nucifera) [4]
மிளகாய் (Capsicum frutescens), Eucalyptus citriodora, கொத்தமல்லி (Coriandrum sativum), அருகம்புல் (Cynodon dactylon), Enhydra fluctuans, காட்டுத்துத்தி (Corchorus olitorius), இலந்தை (Zizyphus jujuba), மா (Mangifera indica), Polygonum spp. ஆகிய மரங்கள், செடிகளின் இலைகள், குச்சிகள் கூடு கட்டப் பயன்படுத்தப் பட்டன.
ஆண், பெண் இரண்டுமே கூடு கட்ட உழைக்கின்றன. கூடு கட்டும் பொருள்களை மார்பாலும் கால்கள்/அலகாலும் முட்டுக் கொடுத்து கூடு கட்டுகின்றன. ஏறக்குறைய 8 முதல் 15 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.
சராசரியாக நாள் ஒன்றிற்கு ஒரு முட்டை வீதம் இடப்படுகின்றது. இவ்வாய்வில் ஒரே நாளில் இரு முட்டைகள் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு கூட்டில் 2 - 6 முட்டைகள் இருந்தன. முட்டைகள் நீள்வட்ட வடிவமுடையது. ஒரு முனை கூராகவும் மறுமுனை மழுங்கியும் காணப்பட்டன.
சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் நீர்க்காகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்க்காகத்தின் கழுத்தில் சுருக்குக் கயிற்றைக் கட்டி விடுவர்; இதனால் பிடிக்கும் மீன்களை காகங்களால் விழுங்க இயலாது. பிறகு, அள்ளிய மீன்களுடன் படகிற்கு இழுக்கப்படும் நீர்க்காகங்களின் தொண்டையிலிருந்து மீன்களைக் கக்க வைத்து விடுவர். கூலியாக சில மீன்கள் அளிக்கப்படும். ஆனால் தற்போது முதன்மையாக மீன்பிடி தொழிலிற்கு இவ்வழக்கம் பயன்படுத்தப் படுவதில்லை; மாறாக, சுற்றுலா வரும் பயணிகளுக்கு களிப்பூட்டும் செயல்பாடாக இவ்வழக்கம் மாறி விட்டது. en:Cormorant fishing
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்குழுமமான கலபகோசு தீவுகளில் காணப்படும் பெரிய நீர்க்காகங்கள் (Phalacrocorax harrisi) பரிணாம வளர்ச்சியில் பறக்குந்தன்மையை இழந்து விட்டன. இவற்றின் இறக்கைகள் குட்டையானவை. மற்றபடி, இவை நீரில் மூழ்கும், நீந்தும் திறமையை இழக்கவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.