![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Hugo_Chavez_Signature.svg/langta-640px-Hugo_Chavez_Signature.svg.png&w=640&q=50)
ஊகோ சாவெசு
From Wikipedia, the free encyclopedia
ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 45வது[1] அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.
ஊகோ சாவெசு | |
---|---|
45வது அரசுத் தலைவர் | |
பதவியில் 2 பிப்ரவரி 1999 – 5 மார்ச் 2013 | |
முன்னையவர் | ரபெல் கால்டெரா |
பின்னவர் | நிக்கோலசு_மதுரோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1954-07-28)28 சூலை 1954 சபனெட்டா, பாரினாசு, வெனிசுவேலா |
இறப்பு | 5 மார்ச்சு 2013(2013-03-05) (அகவை 58) |
அரசியல் கட்சி | ஐந்தாவது குடியரசு இயக்கம் |
துணைவர்(கள்) | நான்சி கால்மெனாரெசு மரிசாபெல் உரொட்ரிகசு |
பிள்ளைகள் | 3 பெண்கள், 1 ஆண் |
கையெழுத்து | ![]() |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/03/Chavez141610.jpg/640px-Chavez141610.jpg)