சப்ரா
From Wikipedia, the free encyclopedia
சப்ரா (Chhapra or Chapra) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும்; மாநகராட்சி மன்றமும் ஆகும். சப்ரா நகரம் காக்ரா ஆறும், கங்கை ஆறும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சப்ரா छपराChapra, நாடு ...
சப்ரா
छपरा Chapra | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | சரண் |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 38.26 km2 (14.77 sq mi) |
ஏற்றம் | 36 m (118 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 2,01,598 |
• நகர்ப்புறம் | 2,49,556 |
இனம் | சாராவிகள் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | போஜ்புரி, இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 841301, 841302 (Sarha) |
Telephone code | +916152 |
மக்களவை தொகுதி | சாரண் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | சப்ரா சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | saran |
மூடு
கி பி 18-ஆம் நூற்றாண்டில் சப்ரா நகரம் டச்சுக்காரர்களின் வணிக சந்தையாக விளங்கியது. [1][2] இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த பிரஞ்சுச்காரர்கள், போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர்கள் சப்ரா நகரத்தில் வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைத்திரேட்டு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் நிறுவினர். 1864-ஆம் ஆண்டு முதல் சப்ரா நகரம் ஒரு நகராட்சி மன்றமாக செயல்பட்டது. சப்ரா நகர்ம் இருப்புப்பாதையாலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளாலும், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.