சாக்கடல்
From Wikipedia, the free encyclopedia
சாக்கடல், உப்புக் கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea, எபிரேயம்: ים המלח (உப்புக் கடல்); அரபு: البحر الميت) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாக்கடல் | |
---|---|
ஆள்கூறுகள் | 31°20′N 35°30′E |
வகை | உவர்ப்புத் தன்மை மிகுதி |
முதன்மை வரத்து | யோர்தான் ஆறு |
முதன்மை வெளியேற்றம் | ஒன்றும் இல்லை |
வடிநிலப் பரப்பு | 41,650 km2 (16,080 sq mi) |
வடிநில நாடுகள் | யோர்தான், இசுரயேல், மேற்குக் கரை |
அதிகபட்ச நீளம் | 67 km (42 mi) |
அதிகபட்ச அகலம் | 67 km (42 mi) |
மேற்பரப்பளவு | 810 km2 (310 sq mi) |
சராசரி ஆழம் | 118 m (387 அடி) |
அதிகபட்ச ஆழம் | 377 m (1,237 அடி) |
நீர்க் கனவளவு | 147 km3 (35 cu mi) |
கரை நீளம்1 | 135 |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | -423 மீ |
Islands | 2 |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377 மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.