ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சர்கார் (Sarkar) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சனவரி 2018 இல் தொடங்கப்பட்ட இத்திரைப்படமானது, தீபாவளி நாளான நவம்பர் 6, 2018 அன்று வெளியானது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் 2018, அக்டோபர் 19 அன்று மாலை வெளியானது.[2][3]
சர்கார் | |
---|---|
இயக்கம் | ஏ. ஆர். முருகதாஸ் |
கதை | ஏ. ஆர். முருகதாஸ், ஜெயமோகன் |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | விஜய், வரலட்சுமி சரத்குமார் |
ஒளிப்பதிவு | கிரிஷ் கங்காதரன் |
படத்தொகுப்பு | ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | சன் பிக்சர்ஸ் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 6 நவம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 100 கோடி |
மொத்த வருவாய் | ₹ 246 கோடி[1] |
சர்கார் திரைப்படத்தை சன் படங்கள் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.[6] இந்தப் படத்தின் தலைப்பானது சூன் 21, 2018 இல் வெளியானது.[7] அதற்கு முன்பு வரை தளபதி 62 எனும் பெயரிலேயே படப்பிடிப்பானது நடந்து வந்தது. கீர்த்தி சுரேஷ் முக்கியப் பெண் கதாப்பத்திரத்திலும் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், டி, சந்தானம் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் ஆனார்கள்.[6][8] ஜெயமோகன் எழுத்தாளராகப் பணிபுரியும் இந்தத் திரைப்படமானது சனவரி, 2018 இல் துவங்கியது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் நடத்தினர்.[4][9][10][11]
பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் செய்திருந்தார்.[8]
# | பாடல் | பாடகர்கள் | நீலம் |
---|---|---|---|
1. | "சிம்டாங்கரன்" | பாம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன் | 4:44 |
2. | "ஒரு வைரல் புரட்சி" | ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீநிதி வெங்கடேஷ் | 5:26 |
3. | சி.இ.ஓ இன் தா ஹவுஸ் | நகுல் அப்யங்கர், பிளேஸ் | 3:52 |
4. | "டாப் டக்கர்" | மோஹித் சவுகான் | 3:41 |
5. | ஓ.எம்.ஜி. பொன்னு | சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி | 4:42 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.