![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Koothu.jpg/640px-Koothu.jpg&w=640&q=50)
கூத்து
நாட்டுக்கூத்து / From Wikipedia, the free encyclopedia
இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து (ஒலிப்புⓘ) என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் எனப்பட்டனர். கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Koothu.jpg/640px-Koothu.jpg)