ஆண்ட்ராய்டு இயங்குதளம்
கைபேசிகளுக்கு கூகிளால் எழுதப்பட்ட இயங்குதளம் / From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ராய்டு என்பது மாற்றியமைக்கப்பட்ட லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய செல்லிடப்பேசிக்காக அதுவும் முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடப்பேசிக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயங்குதளம் (Operating System) ஆகும்[3]. தொடக்கத்தில் இது ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுப் பிறகு இந்நிறுவனம் கூகுளால் வாங்கப்பட்டது. மேலும் அண்மையில் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் இந்நிறுவனம் வாங்கப்பட்டது.[4] கையாளப்பட்டக் குறியீட்டை ஜாவா நிரலாக்க மொழியில் எழுதுவதற்கு உருவாக்குநர்களுக்கு இஃது இடமளிக்கிறது. மேலும் கூகுளால் உருவாக்கப்பட்ட ஜாவா நிரலகம் மூலம் சாதனத்தைக் கட்டுப்படுத்துகிறது.[5]
Android | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
Open Handset Alliance |
---|---|
மூலநிரல் வடிவம் | இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் |
முதல் வெளியீடு | 21 அக்டோபர் 2008 (2008-10-21); 5685 தினங்களுக்கு முன்னதாக |
பிந்தைய நிலையான பதிப்பு | 7.0[1] / 2016 |
Supported platforms | ARM, MIPS, Power Architecture, x86 |
கேர்னர்ல் வகை | Monolithic (Linux) |
அனுமதி | Apache 2.0 and GPLv2[2] |
தற்போதைய நிலை | Current |
இணையத்தளம் | android.com |
கூட்டுநிறுவனங்களான 47 வன்பொருள், மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செல்லிடப்பேசி சாதனங்களுக்கான கட்டுப்பாடற்றத் தரத்தை ஊக்கப்படுத்துவதற்கு ஈடுபாடுகொண்ட ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவப்பட்டு, 5 நவம்பர் 2007 அன்று அண்ட்ராய்டின் விநியோகம் வெளிக்கொணரப்பட்டது.[6][7] பெரும்பாலான அண்ட்ராய்டு குறியீட்டை அப்பாச்சி உரிமத்தின் கீழ் கூகுள் வெளியிட்டது, அப்பாச்சி என்பது ஓர் இலவச மென்பொருள் மற்றும் திறந்த மூல உரிமம் ஆகும்.[8]