இந்திய அரசியல்வாதி, நடிகை, தயாரிப்பாளர் (பிறப்பு 1970) From Wikipedia, the free encyclopedia
குஷ்பு சுந்தர் (இயற்பெயர்: நக்கர்த் கான், பிறப்பு: செப்டம்பர் 29, 1970) தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.
குஷ்பு சுந்தர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நக்கர்த் கான்[1] 29 செப்டம்பர் 1970 பம்பாய், மகாராட்டிரா, இந்தியா (தற்போது மும்பை) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2014-2020), திராவிட முன்னேற்றக் கழகம் (2010-2014) |
துணைவர் | |
பிள்ளைகள் | அவந்திகா ஆனந்திதா |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் |
|
1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.[2] தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.[3]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1988 | தர்மத்தின் தலைவன் | தேவி | |
1989 | வருஷம் 16 | ராதிகா | |
வெற்றி விழா | ஜெயா | ||
1990 | கிழக்கு வாசல் | செல்வி | |
நானும் இந்த ஊருதான் | |||
தாலாட்டு பாடவா | நர்மதா | ||
ஆரத்தி எடுங்கடி | |||
நடிகன் | கீதா | ||
மை டியர் மார்த்தாண்டன் | |||
பாட்டுக்கு நான் அடிமை | |||
மைக்கேல் மதன காமராஜன் | சாலினி சிவராமன் | ||
1991 | நாட்டுக்கு ஒரு நல்லவன் | ரேகா | |
விக்னேஷ்வர் | |||
சின்ன தம்பி | நந்தினி | ||
கிழக்குக் கரை | மகாலட்சுமி | ||
பிரம்மா | ஜெனீபர் | ||
இரவு சூரியன் | |||
1992 | பாண்டியன் | ||
அண்ணாமலை | சுபு | ||
மன்னன் | மீனா | ||
இது நம்ம பூமி | நளினி | ||
அம்மா வந்தாச்சு | நந்தினி | ||
பாண்டித்துரை | முத்துலட்சுமி | ||
சேவகன் | அஞ்சலி | ||
சிங்காரவேலன் | சுமதி | ||
நாளைய செய்தி | |||
ரிக்சா மாமா | |||
1993 | மறவன் | தங்கத்தாய் | |
புருச லட்சணம் | அபிராமி (அம்மு) | ||
உத்தம ராஜா | |||
தர்ம சீலன் | துர்கா | ||
காத்திருக்க நேரமில்லை | பவானி | ||
பிரதாப் | |||
ரோஜாவைக் கிள்ளாதே | அனு | ||
வேடன் | உஷா | ||
கேப்டன் மகள் | |||
ஜாதிமல்லி | ஸ்ரீ ரஞ்சினி | ||
1994 | மனசு ரெண்டும் புதுசு | லட்சுமி | |
வனஜா கிரிஜா | வனஜா | ||
நாட்டாமை | லட்சுமி | ||
இந்து | சிறப்புத் தோற்றம் | ||
வா மகளே வா | |||
1995 | சின்ன வாத்தியார் | ||
கருப்பு நிலா | |||
முறை மாமன் | இந்து | ||
நாட்டுப்புற பாட்டு | |||
வர்றார் சண்டியர் | |||
என் பொண்டாட்டி நல்லவ | |||
கோலங்கள் | |||
முத்துக்குளிக்க வாரிகளா | |||
தேடி வந்த ராசா | |||
1996 | எனக்கொரு மகன் பிறப்பான் | ||
இரட்டை ரோஜா | |||
கோபாலா கோபாலா | |||
1997 | கல்யாண வைபோகம் | ||
தாலி புதுசு | |||
பத்தினி | |||
எட்டுப்பட்டி ராசா | |||
1998 | கலர் கனவுகள் | ||
ஜாலி | |||
துள்ளித் திரிந்த காலம் | தேவி | ||
கல்யாண கலாட்டா | |||
குரு பார்வை | |||
பொண்ணு விளையிற பூமி | |||
வீரத்தாலாட்டு | |||
சிம்மராசி | |||
வீரம் விளஞ்ச மண்ணு | |||
1999 | மின்சார கண்ணா | ||
உன்னைத் தேடி | சிறப்புத் தோற்றம் | ||
பொண்ணு வீட்டுக்காரன் | |||
மனைவிக்கு மரியாதை | |||
மலபார் போலிஸ் | |||
சுயம்வரம் | |||
குடும்பச் சங்கிலி | |||
2000 | அலைபாயுதே | சிறப்புத் தோற்றம் | |
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | |||
மகளிர்க்காக | |||
புரட்சிக்காரன் | |||
உன்னை கண் தேடுதே | |||
விரலுக்கேத்த வீக்கம் | |||
சின்னச் சின்ன கண்ணிலே | ரதி | ||
குரோதம் 2 | |||
கரிசக்காட்டு பூவே | |||
சிம்மாசனம் | |||
வீரநடை | |||
2001 | விண்ணுக்கும் மண்ணுக்கும் | ||
2002 | ஸ்ரீ பண்ணாரி அம்மன் | சிறப்புத் தோற்றம் | |
2004 | காற்றுக்கென்ன வேலி | ||
2005 | ஜூன் ஆர் | ||
வெற்றிவேல் சக்திவேல் | |||
2007 | வேகம் | ||
பழனி | |||
பெரியார் | |||
2009 | வில்லு | சிறப்புத் தோற்றம் | |
2010 | வாடா | சிறப்புத் தோற்றம் | |
2011 | பொன்னர் சங்கர் | ||
இளைஞன் | |||
2013 | தீயா வேலை செய்யணும் குமாரு | சிறப்புத் தோற்றம் |
2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.[4][5] 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[6][7]
பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[8]
பின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு காங்கிரஸ்லிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.