![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Guangdong_in_China.svg/langta-640px-Guangdong_in_China.svg.png&w=640&q=50)
குவாங்டொங்
From Wikipedia, the free encyclopedia
குவாங்டொங் (சீன மொழி: 广东; பாரம்பரிய சீனம்: 廣東; ஆங்கில மொழி: Guangdong; பின்யின்: Guǎngdōng; ஜியுட்பிங்: 2 gwong 1 gwong) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென் சீனக்கடற்கரையை ஒட்டி உள்ள மாகாணங்களுள் ஒன்று. இது முன்னர் ஆங்கிலத்தில் கேன்டன் (Canton) அல்லது குவாங்டுங் (Kwangtung) என அழைக்கப்பட்டது.
குவாங்டொங் மாகாணம்
广东省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 广东省 (Guǎngdōng Shěng) |
• சுருக்கம் | simplified Chinese: 粤; traditional Chinese: 粵 (pinyin: Yuè, Jyutping: Jyut6, Yale: Yuht) |
• கண்டோனீயம் ஜியுட்பிங் | Gwong2 Dung1 Saang2 |
• கண்டோனீய யேல் | Gwóngdūng Sáang |
• கேசிய மொழி Pinyim | Gong3 Dung1 Sen3 |
• தியோச்சூ Peng'im | Guang2 Dong1 Sên2 |
![]() சீனாவில் அமைவிடம்: குவாங்டொங் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 广 guǎng – "பரந்த" 东 dōng – "கிழக்கு" Lit. "கிழக்குப் பெருவெளி" |
தலைநகரம் | குவாங்சோ |
பெரிய நகரம் | சென்சென் |
பிரிவுகள் | 21 அரச தலைவர், 121 கவுண்டி மட்டம், 1642 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | ஹு சுன்ஹுஹா |
• ஆளுநர் | சூ சாவோடான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,79,800 km2 (69,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 15 வது |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 10,64,40,000 |
• தரவரிசை | 1 வது |
• அடர்த்தி | 590/km2 (1,500/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 7 வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் – 99% சுவாங் – 0.7% யாவோ – 0.2% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | கண்டோனீயம், கேசிய மொழி, தியோச்சூ, லைச்சௌ மின், துஹுவா, மாண்டரின் மொழி, சுவாங்கு மொழி |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-44 |
GDP (2014) | CNY 6,779 டிரில்லியன் US$ 1,104 டிரில்லியன்[3] (1st) |
• per capita | CNY 63,452 US$ 10,330 (8 வது) |
HDI (2010) | 0.730[4] (உயர்) (7 வது) |
இணையதளம் | http://www.gd.gov.cn/ (எளிய சீனம்) |
குவாங்டொங் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 广东 | ||||||||||||||||||||||||||||||
சீன எழுத்துமுறை | 廣東 | ||||||||||||||||||||||||||||||
|
நிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட [5][6] குவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.[7]
மாகாணத் தலைநகராக குவாங்சௌ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். 1989 முதல், குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.