கேயுபுண்டு
From Wikipedia, the free encyclopedia
கே மேசைத் தள பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட, கட்டற்ற இயக்குதளம், கேயுபுண்டு ஆகும். இது உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டது. வருடத்திற்கு இரு முறை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு வெளியீட்டுக்கும் குறைந்தது பதினெட்டு மாதங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டு பொதிகளை இலவசமாக வழங்குகின்றது. இதன் காரணமாக பயனர் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய பாதுகாப்பான மற்றும் நிலையானதொரு கணினிப் பணிச்சூழலை தருகின்றது. இதன் சமூகம் சார்ந்த உருவாக்க முறையும் எவ்விடத்தும் கிடைக்கக் கூடிய தன்மையும் "அனைவருக்கும் மானுடம்" என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
கேயுபுண்டு அல்லது குபுண்டு | |
கேயுபுண்டு 8.04 கேடியி 3.5 உடன் | |
விருத்தியாளர் | கனோனிக்கல் நிறுவனம் and சமுக்க வினிநோகத்தர்கள் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்ஸ் |
மூலநிரல் வடிவம் | திறந்த மூலம் |
பிந்தைய நிலையான பதிப்பு | 8.04 (ஹாடி ஹெரொன் Hardy Heron) / ஏப்ரல் 24, 2008 |
கருனி வகை | Monolithic kernel |
இயல்பிருப்பு இடைமுகம் | கே டீ ஈ |
அனுமதி | குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) |
தற்போதைய நிலை | தற்போதைய |
வலைத்தளம் | கேயுபுண்டு |
கேயுபுண்டுவின் சமூகம் இல்லையெனில் கேயுபுண்டுவே இல்லையெனச் சொல்லலாம். ஏனெனில் பன்முகத்தன்மை வாய்ந்த பயனர்களைக் கொண்ட இச்சமூகமே இதனை நிர்மாணித்து உருவாக்கி செயல்படுத்தவும் செய்கின்றது. தனி நபர்களும் குழுக்களும் இதற்கான நிரல்களையும் கலைப் பொருட்களையும் ஆவணங்களையும் தொழில்நுட்ப உதவியினையும் வழங்குவதோடு நில்லாது கேயுபுண்டுவினை பலதரப் பட்ட மக்களிடையே கொண்டு சேர்க்கவும் செய்கிறார்கள். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பினால் கேயுபுண்டு பங்களிப்புகள் பரணிடப்பட்டது 2007-06-11 at the வந்தவழி இயந்திரம் பக்கத்தின் உதவியினை நாடவும்.
கேயுபுண்டு மற்றும் உபுண்டு திட்டங்களுக்கான ஆதரவினை வழங்கும் நிறுவனம் கனோனிகல் ஆகும். இந்நிறுவனம் குனு/ லினக்ஸ் மென்பொருட்களை விநியோகிப்பதில் உலகளவில் முன்னணி வகிக்கின்றது. உபுண்டு மற்றும் கேயுபுண்டுவிற்கான முழுமையான வர்த்தக ரீதியான ஆதரவினையும் கனோனிகல் நிறுவனம் நல்குகிறது.