குட்டி (Kutty) (2001) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். ஜானகி விஸ்வநாதன் இயக்கிய நாடகத் திரைப்படமான . இதில் ரமேஷ் அரவிந்த், கௌசல்யா, நாசர், ஈஸ்வரி ராவ் மற்றும் எம்.என். ராஜம் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியானதும் பரவலான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3]

விரைவான உண்மைகள் குட்டி, இயக்கம் ...
குட்டி
இயக்கம்ஜானகி விஷ்வனாதன்
தயாரிப்புஜானகி விஷ்வனாதன்
ரமேஷ் அருனாச்சலம்
கதைஜானகி விஷ்வனாதன்
ரமேஷ் அருனாச்சலம்
சிவசங்கரி (கதை)
இசைஇளையராஜா
நடிப்புபி. ஸ்வேதா
ஆர்.எஸ் சிவாஜி
ரமேஸ் அரவிந்த்
எம். என் ராஜம்
சூரஜ் பாலாஜி
ஈஸ்வரி ராவ்
எஸ்.என். லக்ஸ்மி
வெளியீடு2001
ஓட்டம்118 நிமிடங்கள்.
மொழிதமிழ்
மூடு

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குட்டி தனது கிராமத்தில் பெற்றோர்களின் செல்ல மகளாக வளர்க்கப்படுகின்றாள். இடையே அவளின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். நகரத்தில் வேலை ஒன்று இருப்பதனை அறியும் இவளின் தாயாரின் சொற்கேட்டு அங்கு ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றாள். அங்கு பல கொடுமைகளுக்கும் ஆளாகின்றாள் குட்டி இருப்பினும் அங்கு பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவனிடம் அவ்வீட்டில் எஜமானி அம்மாவின் தாயார் பல முறை அடிப்பதாகவும் கூறுகின்றாள். இதனைக் கேட்டு தனது பெற்றோர்களுக்கு மடல் ஒன்றினையும் அனுப்பி வைக்கச் சொல்லுகின்றாள் குட்டி ஆனால் ஊரின் பெயரினை ஞாபகம் வைத்திருக்கத் தவறியதால் மடலை அனுப்பமுடியாமலும் போய்விடுகின்றது. பின்னர் அக்கடையருகே வந்திருக்கும் காடையன் ஒருவன் கண்ணில் குட்டியும் அகப்படுகின்றாள். ஒரு நாள் யாருக்கும் தெரியாதவண்ணம் அவளை அவளின் ஊருக்கே அழைத்துச் செல்வதாகப் பொய்யொன்றினைக் கூறி விலைமாதுவாக விற்கவும் செய்கின்றான் அக்கொடியவன்.

விருதுகள்

குட்டி திரைப்படம் வெளியானதிலிருந்து பின்வரும் விருதுகளை வென்றுள்ளது.[4] 2002 கெய்ரோ சிறுவர்களுக்கான சர்வதேச திரைப்பட விழா (எகிப்து)

  • வென்ற விருது - சிறப்பு விருது

2002 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- பி.சுவேதா
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறப்பு விருது- இயக்குநர் - ஜானகி விஷ்வனாதன்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.