From Wikipedia, the free encyclopedia
கீர்த்தி ஶ்ரீ இராஜசிங்கன் (Kirti Sri Raja Singha, சிங்களம்: ශ්රී කීර්ති ශ්රී රාජසිංහ, 1734 - 2 ஜனவரி 1782) என்பவன் கண்டி இராச்சியத்தின் இரண்டாவது நாயக்க வம்ச மன்னன் ஆவான். இவன் மதுரை நாயக்க இளவரசனும், ஶ்ரீ விஜய இராஜசிங்கனின் மனைவியின் சகோதரனும் ஆவான்.
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் Kirti Sri Rajasinha | |
---|---|
கண்டி இராச்சியத்தின் மன்னன் | |
ஆட்சி | 11 ஆகத்து 1747 – 2 சனவரி 1782 |
முடிசூட்டு விழா | 1750 |
முன்னிருந்தவர் | விஜய இராஜசிங்கன் |
பின்வந்தவர் | ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் |
துணைவர் | நடுக்காட்டு சாமி நாயக்கரின் மகள், மேலும் மூன்று நாயக்க மறுமணங்கள், யக்கட டொலி |
வாரிசு(கள்) | ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் (யக்கட டொலியுடன்) |
மரபு | கண்டி நாயக்கர் |
தந்தை | நரனப்ப நாயக்கர் |
பிறப்பு | 1734 |
இறப்பு | 2 சனவரி 1782 கண்டி |
ஶ்ரீ விஜய இராஜசிங்கன் 1747 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், நாயக்க வம்ச மரபுப்படி அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் கண்டியின் மன்னன் ஆனான். அப்போது அவனுக்கு பதினாறு வயது. எனவே அவன் முடிசூடி ஆட்சியை பொறுப்பேற்றது 1751 ஆம் ஆண்டிலாகும். அதுவரையிலும் அவனது தந்தை நரனப்பா நாயக்க ஆட்சியை கவனித்தார். நாயக்கர்களது செயல்களை விரும்பாத பிரதானிகள் அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இவனது காலம் பிரதானிகளுக்கும் மன்னனுக்கும் இடையில் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.
இவன் கி.பி 1760ம் ஆண்டு ஒல்லாந்தருக்கு எதிராக மக்களை கிளர்ச்சி அடைய செய்தான். பிரித்தானியரின் உதவிபெற பிரித்தானியத் தூதுவான் ஜான் பைபசை 1762ல் சந்தித்துப் பேசினான். கி.பி.1765 சனவரியில் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமிப்புச் செய்தபோது ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்கிறான்.
இவன் தலதா பெரகராவுடன் தேவாலயப் பெரகராவையும் இணைத்து எசல பெரகராவை நடத்தினான். பழைய இராசதானிகளில் சிதைவுற்றிருந்த விகாரைகளை புனர்நிர்மானம் செய்தான். வெலிவிட்ட சரணங்கர தேரர் என்ற பௌத்த பிக்குவின் சமய பணிகளிக்கு ஆதரவு வழங்கினான். விகாரைகளை கொண்டு நடத்த அதற்கு நிலபுலன்களை வழங்கினான்.
உபசம்பதா அந்தஸ்தைப் பெற்றிருந்த குருமாரை நாட்டில் காண்பதே அரிதாக இருந்தது. இதனால் சரணங்கர தேரரின் ஆலோசனைப்படி மன்னன் ஒல்லாந்தரிடம் கப்பலைப் பெற்று சீயம் நாட்டிற்குத் தூதுக் குழு ஒன்றை அனுப்பி உபாலி தேரர் உட்பட சமய குருமாரை வரவழைத்து 1753 ஆம் ஆண்டு உபசம்பதா வைபவத்தை நடத்து வித்தான்.
இவர் வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர தேரருக்கு ' சங்கராஜா' பதவியை வழங்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.