ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல்
From Wikipedia, the free encyclopedia
ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல் (Henry Gray's Anatomy of the Human Body) என்பது முதன் முதலாக 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியான ஒரு புகழ்பெற்ற ஆங்கிலப் பாடநூல். 1858ல் வெளியான பொழுது அதன் தலைப்பு Gray's Anatomy: Descriptive and Surgical (கிரேயின் அனாட்டமி: டிஸ்க்ரிப்டிவ் அண்ட் சர்ஜிக்கல்) (கிரேயின் உடற்கூறு இயல்: அமைப்பு விளக்கமும் அறுவையும்). அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டு 1860ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார். அவர் தொடங்கிய புத்தகத்தை மற்றவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி நவம்பர் 24, 2004ல் இங்கிலாந்தில் 39 ஆவது பதிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |