கிரெம்லின்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கிரெம்லின் (Kremlin) (Moscow Kremlin; உருசியம்: Московский Кремль, ஒ.பெ Moskovskiy Kreml', பஒஅ: [ˈmɐˈskofskʲɪj krʲemlʲ]) என்ற உருசிய சொல் கோட்டை அல்லது கொத்தளத்தைக் குறிப்பதாகும். உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின் பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும்.தெற்கே மாஸ்க்வா ஆறும் கிழக்கே புனித பாசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் எதிர்நோக்கியுள்ளது.உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.இந்த கோட்டையில் உருசியாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது.
மாசுகோ கிரெம்லின் | |
---|---|
உள்ளூர் பெயர் உருசியம்: Московский Кремль | |
அமைவிடம் | மாசுகோ, உருசியா |
ஆள்கூற்றுகள் | 55°45′6″N 37°37′4″E |
பரப்பளவு | 27.7 ha (0.277 km2) |
கட்டப்பட்டது | 1482–1495 |
அலுவல் பெயர் | கிரெம்லினும் செஞ்சதுக்கமும், மாசுக்கோ |
வகை | பண்பாடு |
வரன்முறை | i, ii, iv, vi |
தெரியப்பட்டது | 1990 (14வது தொடர் ) |
உசாவு எண் | 545 |
பகுதி | கிழக்கு ஐரோப்பா |
எவ்வாறு வெள்ளைமாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது.
இக்கோட்டையினுள்ளே தான் உருசியப் புரட்சிக்குத் தலைமையேற்ற விளாடிமிர் லெனின் உடல் பாதுகாக்கப் படுகிறது.இங்கு பாதுகாக்கப் பட்டு வந்த அடுத்த தலைவர் ஜோசப் ஸ்டாலின்உடல் நவம்பர் 1, 1961 அன்று வெளியே எடுக்கப்பட்டு அப்போதைய அதிபர் நிகிடா குருச்சேவ் ஆணைப்படி கிரெம்லின் சுவர்களுக்கு வெளியே எளிய கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.