![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Khabur%252CSheikhHamad.jpg/640px-Khabur%252CSheikhHamad.jpg&w=640&q=50)
காபூர் ஆறு (புறாத்து ஆறு)
ஒரு ஆறு / From Wikipedia, the free encyclopedia
காபுர் ஆறு (Khabur River) என்பது சிரியாவின் இயூப்ரடீசு ஆறின் மிகப்பெரிய வற்றாத துணை ஆறு ஆகும். காபுர் துருக்கியில் தோன்றினாலும், ராசு அல்-அயினைச் சுற்றியுள்ள சுண்ணாம்புக் கரடு நீரூற்றுகள் ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாகும். பல முக்கியமான பள்ளத்தாக்குகள் அல்-அசாக்காவின் வடக்கே காபுருடன் இணைகின்றன, இந்த இணைப்பு காபுர் முக்கோணம் அல்லது மேல் காபுர் பகுதி என்று அறியப்படுகிறது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, காபுர் படுகையில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு 400 மி.மீ இலிருந்து 200 மி.மீ இற்கும் குறைவாகக் குறைகிறது, இது வேளாண்மைக்கான முக்கிய நீராதாரமாக ஆற்றை உருவாக்குகிறது. காபுர் இயூப்பிரட்டீசுடன் புசைரா நகருக்கு அருகில் இணைகிறது.
காபுர் Khabur | |
---|---|
![]() அல்-அசக்காத்திற்குத் தெற்கே காபுர் ஆறு | |
![]() | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | சிரியா, துருக்கி |
நகரம் | ராசு அல்-ஐன், அல்-அசக்கா, புசாரியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ராசு அல்-ஐன் |
⁃ ஏற்றம் | 350 மீ (1,150 அடி) |
முகத்துவாரம் | புறாத்து ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 35°8′33″N 40°25′51″E |
நீளம் | 486 கிமீ (302 மைல்) |
வடிநில அளவு | 37,081 கிமீ² |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 45 மீ³/செ (1,600 கன அடி/செ) |
⁃ குறைந்தபட்சம் | 2 மீ³/செ (71 கன அடி/செ) |
⁃ அதிகபட்சம் | 57 மீ³/செ (2,000 கன அடி/செ) |
[1][2] |
கபூர் சமவெளியின் 40 இலட்சம் ஏக்கர் (16,000 கிமீ²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் சிரியாவின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.