![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/India_Uttar_Pradesh_districts_2012_Gautam_Buddha_Nagar.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Gautam_Buddha_Nagar.svg.png&w=640&q=50)
கௌதம புத்தா நகர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கௌதம புத்தா நகர் மாவட்டம் (Gautam Budh Nagar district, இந்தி: गौतम बुद्ध नगर ज़िला, உருது: گوتم بدھ نگر ضلع) அல்லது ஜிபி நகர், வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டமாகும். பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளாலான இந்த மாவட்டம்[2] தில்லியின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத் தலைநகரமாக நொய்டா விளங்குகிறது. 2011 கணக்கெடுப்பின்படி கடந்த பத்தாண்டுகளில் 51.52% மக்கள்தொகை கூடியுள்ள இந்த மாவட்டம் இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[3]
விரைவான உண்மைகள் கௌதம புத்தா நகர் மாவட்டம்गौतम बुद्ध नगर ज़िला گوتم بدھ نگر ضلع, மாநிலம் ...
கௌதம புத்தா நகர் மாவட்டம் गौतम बुद्ध नगर ज़िला گوتم بدھ نگر ضلع | |
---|---|
![]() உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கௌதம புத்தா நகர் மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், ![]() |
Administrative division | மீரட் கோட்டம் |
தலைநகரம் | நொய்டா |
பரப்பளவு | 1,442 km2 (557 sq mi) |
மக்கள்தொகை | 1,674,714 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,306/ச.கி.மீ (3,382.5/ச.மீ) |
படிப்பறிவு | 89.78 சதவீதம்[1] |
மக்களவைத் தொகுதி | கௌதம புத்தா நகர் |
அலுவல் இணையதளம் |
மூடு
இம்மாவட்டத்தின் நொய்டா பகுதியில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.