![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/Sulfuric-acid-2D-dimensions.svg/langta-640px-Sulfuric-acid-2D-dimensions.svg.png&w=640&q=50)
சல்பூரிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
சல்பூரிக் அமிலம் (Sulfuric or sulphuric acid, H2SO4), ஒரு கடுமையான கரிமமற்ற காடி (மினரல் காடி). இது நீரில் எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக் காடி பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 மில்லியன் டன் கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், தானுந்துகளில் பயன்படும் ஈயம்-காடி மின்கலங்கள் செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், வெடிமருந்துகள் செய்தல் ஆகியவை.
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
Sulfuric acid (சல்ஃவூரிக் ஆசிட்) கந்தகக் காடி | |
வேறு பெயர்கள்
விட்ரியோல் எண்ணெய் ("Oil vitriol") | |
இனங்காட்டிகள் | |
7664-93-9 ![]() | |
EC number | 231-639-5 |
வே.ந.வி.ப எண் | WS5600000 |
UN number | 1830 |
பண்புகள் | |
H2SO4 | |
வாய்ப்பாட்டு எடை | 98.08 கி/மோல் (g/mol) |
தோற்றம் | clear, colorless, odorless liquid |
அடர்த்தி | 1.84 g/cm3, நீர்மம் |
உருகுநிலை | 10 °C (50 °F; 283 K) |
கொதிநிலை | 290 °C (554 °F; 563 K) |
கலக்ககூடியது | |
காடித்தன்மை எண் (pKa) | −3 |
பிசுக்குமை | 26.7 cP (20 °C) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0362 |
ஈயூ வகைப்பாடு | Corrosive (C) |
R-சொற்றொடர்கள் | R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S30, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
கடுங்காடிகள் தொடர்புடையவை |
Selenic acid Hydrochloric acid Nitric acid |
தொடர்புடைய சேர்மங்கள் | Sulfurous acid Peroxymonosulfuric acid Sulfur trioxide ஒலீயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கந்தகக் காடி பார்ப்பதற்கு நிறமற்றதாக இருக்கும். இது அடர்த்தியான அரிப்புத்தன்மை மிக்க ஒரு வேதிப்பொருள். இதனை ஐதரசன் சல்பேட்டு (Hydrogen Sulfate) என்றும் கூறுவதுண்டு. இடைக்கால ஐரோப்பியாவில் இதனை ஆயில் ஆஃவ் விட்ரியோல் (Oil of Vitriol) என்றும் கூறினர், ஏனெனில் இக் காடியின் பயன்பாட்டால் பெறும் வெவ்வேறு சல்பேட்டு உப்புகள் பல நிறங்களில் கண்ணாடி போன்று காட்சி அளித்தன. கண்ணாடியின் இலத்தீன் மொழிச்சொல் விட்ரியசு (vitreus).