![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2583%25E0%25AE%25AA%25E0%25AE%25BE_%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE_%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BE_%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D_%25E0%25AE%2587%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595_%25E0%25AE%258A%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D.svg/langta-640px-%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2583%25E0%25AE%25AA%25E0%25AE%25BE_%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE_%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BE_%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D_%25E0%25AE%2587%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595_%25E0%25AE%258A%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D.svg.png&w=640&q=50)
கதிர்வீச்சு
From Wikipedia, the free encyclopedia
கதிர்வீச்சு (ஒலிப்புⓘ) (radiation) என்பது இயற்பியலில் ஆற்றலுள்ள அல்லது சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஒரு ஊடகத்தினூடாகவோ ஒரு வெளியினூடாகவோ கடந்து செல்வதைக் குறிக்கும். கதிர்வீச்சில் முக்கியமாக அயனாக்கக் கதிர்வீச்சு, அயனாக்காக் கதிர்வீச்சு என இரண்டு வகையுண்டு. பொதுவாக நடைமுறையில் கதிர்வீச்சு எனக் குறிப்பிடும்போது, அது அயனாக்கக் கதிர்வீச்சை மட்டுமே குறிக்கின்றது.
ஆல்ஃபா துகள்கள் (α), பீட்டா துகள்கள் (β), நொதுமி (Neutorn) என்பவை அயனாக்கக் கதிர்வீச்சைக் தரவல்லன. மின்காந்த அலைகள், அவற்றின் அதிர்வெண்ணின் அளவிற்கேற்ப அயனாக்க கதிர்வீச்சாகவோ, அயனாக்காக் கதிர்வீச்சாகவோ இருக்கலாம். மின்காந்த அலைவீச்சின் முடிவில் காணப்படும் குறுகிய அலைநீளம் கொண்ட, அதிக அதிர்வெண்ணுடைய ஊடுகதிர் அலை (X-ray), புற ஊதாக் கதிர்கள் (Ultraviolet rays), காமா கதிர்கள் (γ) போன்றன அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்கும். கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகள் (visual light), நுண்ணலைகள் (microwaves), இரேடியோ அலைகள் (radio waves), போன்றன அயனாக்கா கதிர்வீச்சுக்களைத் தரும்.
பொதுவில் கதிர்வீச்சு என அடையாளப்படுத்தப்படாவிடினும், இவ்வகை அயனாக்கா கதிர்வீச்சுக்களும் உண்மையில் கதிர்வீச்சுக்களே.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.svg/640px-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.svg.png)