சந்தான பாரதி இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கடமை கண்ணியம் கட்டுப்பாடு 1987 ஆவது ஆண்டில் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், கீதா, கேப்டன் ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்றாலும் இது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[1] இத்திரைப்படம் சத்யராஜ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவியது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்தாலும் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை.[2]
கடமை கண்ணியம் கட்டுப்பாடு | |
---|---|
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | கமல்ஹாசன் சந்திரஹாசன் |
கதை | டி தனபாலன் |
திரைக்கதை | அனந்து சந்தான பாரதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் கீதா ஜீவிதா நாசர் டெல்லி கணேஷ் கமலா காமேஷ் நளினி சிவசந்திரன் வி. கே. ராமசாமி மலேசியா வாசுதேவன் மேஜர் சுந்தரராஜன் |
ஒளிப்பதிவு | சுரேஷ் குமார். ஏ |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 12 சூன் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
"கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்பது முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை அவர்களின் தாரக மந்திரமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.