![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/SL_Horton_Plains_NP_asv2020-01_img16.jpg/640px-SL_Horton_Plains_NP_asv2020-01_img16.jpg&w=640&q=50)
ஓட்டன் சமவெளி தேசிய வனம்
From Wikipedia, the free encyclopedia
ஓட்டன் சமவெளி (Horton Plains) இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக (புகலிடம்) காணப்பட்ட ஓட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான (பசுமை மாறா) மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.[2] இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.[3]
விரைவான உண்மைகள் ஓட்டன் சமவெளி தேசிய வனம், அமைவிடம் ...
ஓட்டன் சமவெளி தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() உலக முடிவு எனப்படும் இடம் | |
அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | நுவரெலியா, ஒஹிய |
பரப்பளவு | 3,160 எக்டேர்கள் (12.2 sq mi) |
நிறுவப்பட்டது | 1969 (பாதுகாக்கப்பட்ட இயற்கைப்பகுதி) 1988 (தேசிய வனம்) |
வருகையாளர்கள் | 150,000 |
நிருவாக அமைப்பு | வனவிலங்குத் திணைக்களம் |
உலகப் பாரம்பரியக் களம் | 2010 (இலங்கையின் மைய உயர்நிலங்களுக்குள் அமைந்துள்ளது)[1] |
மூடு