From Wikipedia, the free encyclopedia
சிற்றோடை (Stream) என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை ஆற்றை விடச் சிறியவை. இவை ஆறுகளிலிருந்து பிரிகின்றன அல்லது பல சிற்றோடைகள் ஒன்றிணைந்து ஆறாக மாறுகின்றன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நிலத்தடி நீரை அதிகரிக்கின்றன. காடுகளின் செழிப்பிற்கும் அதன் வளத்திற்கும் உதவுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Seamless Wikipedia browsing. On steroids.