![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Light-sun-to-earth-tamil.png/640px-Light-sun-to-earth-tamil.png&w=640&q=50)
ஒளியின் வேகம்
From Wikipedia, the free encyclopedia
வெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகம் (speed of light) என்பது இயற்பியலில் ஒரு அடிப்படை மாறிலி. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. கட்டற்ற வெளியில் (free space), கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு உட்பட எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகளினதும் வேகம் இதுவே. ஓய்வுத்திணிவு பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.
![]() ஞாயிறு ஒளி புவியினை அடைய 8 நிமிடம், 19 விநாடி ஆகின்றது. | |
சரியான அளவீடு | |
---|---|
விநாடிக்கு மீட்டர் | 299,792,458 |
செயல் ஆற்றல் அலகு | 1 |
தோரய அளவீடு | |
விநாடிக்கு கிலோமீட்டர் | 300,000 |
ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டர் | 1,079 மில்லியன் |
விநாடிக்கு மைல் | 186,000 |
ஒரு மணி நேரத்திற்கு மைல் | 671 மில்லியன் |
நாளுக்கான வானியல் அலகு | 173 |
தோராயமாக ஒளி சமிக்கை கடக்கும் நேரம் | |
தொலைவு | நேரம் |
ஒரு அடி | 1.0 நேனோசக்கன் |
ஒரு மீட்டர் | 3.3 நேனோசக்கன் |
ஒரு கிலோமீட்டர் | 3.3 μs |
ஒரு மைல் | 5.4 μs |
புவி ஒத்திணைவு வட்டப்பாதை யில் இருந்து புவிக்கு | 119 ms |
புவியின் நிலநடுக்கோடு நீளம் | 134 மீட்டர்விநாடி |
நிலவுயில் இருந்து புவிக்கு | 1.3 விநாடி |
ஞாயிறுயில் இருந்து புவிக்கு(1 AU) | 8.3 நிமிடம் |
one பாசெக்கு | 3.26 ஆண்டுகள் |
பிராக்சீமா விண்மீன்யில் இருந்து புவிக்கு | 4.24 ஆண்டுகள் |
ஆல்பா விண்மீன்யில் இருந்து புவிக்கு | 4.37 ஆண்டுகள் |
அன்மய அண்டம் யில் இருந்து புவிக்கு, | 25,000 ஆண்டுகள் |
விண்மீன்திரள் குறுக்காக | 100,000 ஆண்டுகள் |
அண்டோர்மிடா பேரடையில் இருந்து புவிக்கு | 2.5 மில்லியன் ஆண்டுகள் |
வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.
ஒளி, ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் விலகல் குறியீட்டெண் (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.
பொதுச் சார்புக் கோட்பாட்டில், "c", வெளிநேரத்தின் ஒரு முக்கியமான மாறிலியாகும். ஈர்ப்பின் காரணமாக வெளிநேரம் வளைந்து இருப்பதனால், தூரம், நேரம் என்பவற்றையும்; அதனால், வேகத்தையும், தெளிவாக வரையறுக்க முடியாதுள்ளது.