ஐக்கிய முன்னணி (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய முன்னணி (United Front) என்பது (1996-1998) காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.
விரைவான உண்மைகள் ஐக்கிய முன்னணி, சுருக்கக்குறி ...
ஐக்கிய முன்னணி | |
---|---|
சுருக்கக்குறி | ஐ.மு |
தலைவர் | சந்திரபாபு நாயுடு |
தொடக்கம் | 1996 |
கலைப்பு | 1998 |
பிரிவு | தேசிய முன்னணி |
தலைமையகம் | ஆந்திர பிரதேச இல்லம், டெல்லி |
இந்தியா அரசியல் |
மூடு