![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Ant%25C3%25B3nio_Guterres_meeting_with_Iranian_Interior_Minister_02.jpg/640px-Ant%25C3%25B3nio_Guterres_meeting_with_Iranian_Interior_Minister_02.jpg&w=640&q=50)
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை அங்கங்களில் ஒன்றான ஐநா செயலகத்தை தலைமையேற்று நடத்துபவராகும். ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தலைவராகவும் வெளித்தொடர்பாளராகவும் விளங்குகிறார்.
விரைவான உண்மைகள் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், வாழுமிடம் ...
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் | |
---|---|
![]() ஐக்கிய நாடுகள் சின்னம் | |
வாழுமிடம் | சட்டன் பிளேசு,மன்ஹாட்டன், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள், காலவரையின்றி நீட்டிக்கப்படலாம் |
முதலாவதாக பதவியேற்றவர் | கிளாட்வின் ஜெப் 24 அக்டோபர் 1945 (பொறுப்பு) டிரைக்வெ லீ 1 பெப்ரவரி 1946 |
உருவாக்கம் | ஐக்கிய நாடுகள் பட்டயம், 26 சூன் 1945 |
இணையதளம் | ஐநா பொதுச்செயலாளர் இணையதளம் |
மூடு
தற்போதைய பொதுச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் சனவரி 1, 2007 முதல் இருந்து வருகிறார். இவரது முதல் பதவிக்காலம் திசம்பர் 31, 2011 அன்று முடிகிறது. அடுத்த பதவிக் காலத்திற்கும் தொடர இவருக்கு தகுதியுள்ளது.