எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
எழும்பூர் சட்டமன்றத் தொகுதி (Egmore Assembly constituency) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 16. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.