என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5]

விரைவான உண்மைகள் என் ராசாவின் மனசிலே, இயக்கம் ...
என் ராசாவின் மனசிலே
Thumb
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புராஜ்கிரண்
கதைகஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
விநியோகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 1991 (1991-04-13)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

பாடல்கள்

விரைவான உண்மைகள் என் ராசாவின் மனசிலே, இசையமைப்பாளர் இளையராஜா ...
என் ராசாவின் மனசிலே
இசையமைப்பாளர்
வெளியீடு1991
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்27:35
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
மூடு

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-இல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா, பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...
எண்பாடல்பாடியவர்(கள்)கால அளவு
1'குயில் பாட்டு' (மகிழ்ச்சி)சுவர்ணலதா4:54
2'குயில் பாட்டு' (சோகம்)சுவர்ணலதா3:35
3'பாரிஜாத பூவே'எஸ். என். சுரேந்தர், சித்ரா5:00
4'பெண் மனசு ஆழம் என்று'இளையராஜா3:50
5'போடா போடா புண்ணாக்கு'கல்பனா, வடிவேலு, ராஜ்கிரண்5:43
6'சோலை பசுங்கிளியே'இளையராஜா4:33
மூடு

விருதுகள்

1991 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது இரண்டாம் பரிசு

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.