உரையாடல்
மனிதர்கள் பேசிக் கொள்வதை உரையாடல் என்கிறோம். / From Wikipedia, the free encyclopedia
உரையாடல் (conversation) என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் (உரை) கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் என்பது குமுகாயத்தில் ஒரு இன்றியமையாத திறனாகக் கருதப் படுகின்றது. ஒரு மொழியைக் கற்கும் போது, அதில் உரையாடல் செய்வது எவ்வாறு என்பதையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
உரையாடல் பகுப்பாய்வு என்பது சமூகவியலில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகும். இதில், மனிதர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்கின்றனர், அந்த அளவளாவுதல் அமைப்பு, அமைப்பாண்மை ஆகியன எவ்வாறு உள்ளன என்பன பற்றி விரிவாக அலசப் படுகின்றது.