உமையா கலீபகம் (Umayyad Caliphate அரபி:بنو أمية) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் இரண்டாவது கலீபகம் ஆகும். சிரியாவின் திமிஷ்கு நகரம் இதன் தலைநகரம் ஆகும். ராசிதீன் கலீபாக்களில் கடைசி கலீபாவான அலீ அவர்கள் இறந்த பின்பு அப்போதைய, சிரியாவின் ஆளுநரான முதலாம் முஆவியா என்பவரால் உமையா கலீபகம் உருவாக்கப்பட்டது. இவர் பனூ உமய்யா குலத்தில் இருந்து வந்தவர் என்பதால் இது உமையா கலீபகம் என அழைக்கப்பட்டது. இது தனது உச்சத்தில் ஐந்து மில்லியன் சதுர மைல் பரப்பளவில், அரபுத் தீபகற்பம், பாரசீகம், சிந்து சமவெளி, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய மூவலந்தீவு (ஐபீரிய தீபகற்பம்) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது அந்த காலகட்டம் வரை, ஒரு பேரரசினால் ஆளப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பு ஆகும்[2]. மேலும் இற்றை வரை ஆளப்பட்ட நிலப் பரப்புக்களில் ஐந்தாவது மிகப்பரந்த நிலப்பரப்பு ஆகும்.
உமையா கலீபகம் بنو أمية பனூ உமையா | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
661–750 | |||||||||||||||
கொடி | |||||||||||||||
நிலை | அமீரகம் | ||||||||||||||
தலைநகரம் | திமிஷ்கு | ||||||||||||||
நாடுகடத்தப்பட்ட தலைநகரம் | குர்துபா | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி அலுவல் மொழி, அரமேயம், அர்மேனியன், பெர்பர் மொழி, காப்திக், சியார்சிய மொழி, கிரேக்க மொழி, ஈபுரு, துருக்கிய மொழி, குர்தியம்[1], மத்திய பாரசீகம், மொசாரபி | ||||||||||||||
சமயம் | சுன்னி இசுலாம் | ||||||||||||||
அரசாங்கம் | கலீபகம் | ||||||||||||||
• 661–680 | முதலாம் முஆவியா | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• தொடக்கம் | 661 | ||||||||||||||
• முடிவு | 750 | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
750 | 13,000,000 km2 (5,000,000 sq mi) | ||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||
• 7ம் நூற்றாண்டு | 62000000 | ||||||||||||||
நாணயம் | உமையா தீனார் | ||||||||||||||
|
அப்பாசியர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, பொகா 750 இல் இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இருப்பினும் இதனைத் தொடர்ந்து கலீபகத் தலைமை, அப்பாசியர்கள், குர்துபா உமையாக்கள், பாத்திம கலீபாக்கள் மற்றும் உதுமானியக் கலீபாக்கள் என 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.