From Wikipedia, the free encyclopedia
புலாவ் உபின் என்பது சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். சிங்கபூரின் வடகிழக்கில் சுமார் 10.19 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவில் ஒரு காலத்தில் கிரானைட் சுரங்கங்கள் இருந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். இந்தத் தீவு இதன் இயற்கை வளங்ககளுக்காக மிகவும் பிரபலமானது. சிங்கப்பூரில் இன்றும் வளர்ச்சி அடையாத கிராமப் பகுதி இது ஒன்றே.
மலாய் மொழியில் புலாவ் உபின் என்ற வார்த்தைக்கு கிரானைட் தீவு என்று பொருள். ஜாவாநியர்களின் மொழியில் உபின் எட்ரால் சதுரமாக்கப் பட்ட கற்கள் என்று பொருள். ஒருகாலத்தில் தரைகளில் பதிக்கப்பட்ட இந்தத் தீவின் கற்கள் சுபின் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி உபின் ஆனது என்றும் கூறுவர். ஹோக்கெயின் மொழியில் இந்தத் தீவை கல் மலை என்று பொருள் தரும் ஸிஒஹ் ஸுஆ' என்று அழைத்தனர்.
இந்தத் தீவை பற்றி செவிவழிச் செய்தியாக கூறப்படும் கதையில், ஒருநாள் ஒரு யானை, பன்றி மற்றும் ஒரு தவளை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் தீவில் இருந்து அதன் மருகரையான ஜோஹோருக்கு( தற்பொழுதுள்ள மலேசியா), நீந்திச் செல்ல வென்டும், அதில் தோற்போர் கல்லாக மாறுவர் என்ற நிபந்தனையுடன் நீந்தத் தொடங்கினர். பலத்த போராட்டத்திற்கு பின் மூவராலும் மறு கரையை அடைய முடியவில்லை. இதில் யானையும், பன்றியும் புலாவ் உபின் தீவாக மாறியதாகவும் , தவளை மற்றொரு தீவான புலாவ் செகுடு என்று அழைக்கப்படும் தவளை தீவாக ஆனது என்றும் கூறுவர்.
புலாவ் உபின் தீவு முதன்முதலில் 1828 ஆம் ஆண்டு பிராங்க்ளின் மற்றும் பிலிப் ஜாக்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட வரைபடத்தில் புளோ ஒபின் என்ற பெயரில் இருந்தது
பிரித்தானியர்கள் சிங்கப்பூரை ஆண்ட காலம் தொட்டே இந்தத் தீவின் கிரானைட்டுகள் மிகவும் பிரபலமாகும். இந்த மலையில் உள்ள குகைகள், முகுடுகள் , உயர்ந்து வளர்ந்து நிற்கும் பாறைகள் என்று பார்ப்பதற்கு அழகாக இருந்த காரணத்தினால் இதை 1850 ஆம் ஆண்டு ஜான் டர்ன்பால் தாம்சன் என்பவர் ஓவியமாக வரைந்துள்ளார்.
இங்கு இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கற்கள் பெத்ரா ப்ரான்கா தீவில் உள்ள கலங்கரை விளக்கம் கட்டுவதற்கும், சிங்கப்பூர்-ஜோஹூர் தரைப்பாலம் அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. 1970 வாக்கில் மூடப்பட்ட இந்த சுரங்கங்கள் இன்று மீண்டும் காடுகளாக மாறிவிட்டன. இங்கு வாழ்த்த மக்களும் மத்திய தீவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.
சுரங்கத்தொழில் அல்லாது இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களும் செய்யப்பட்டன.
1880 ஆம் ஆண்டு கல்லாங் ஆற்றுப்படுகையில் வசித்த மலாய் இன மக்கள் எண்டுட் செனின் என்பவர் தலைமையில் இந்தத் தீவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. முன்பிருந்த பல காம்பூங்கள் அந்த இடத்தின் சீற்றத்தை வைத்தோ அல்லது அங்கு முதல் குடியேறியவரின் பெயரை வைத்தோ அழைக்கப்பட்டது.
லேமன் என்பவர் வசித்த இடம் கம்போங் லேமன் ஆனது, ஜாவா என்ற சிங்கப்பூரார் வசித்த இடம் காம்போங் சிக் ஜாவா என்றானது. ஜெளுடோங் மரம நிறைத்த சாங்கி பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் வசித்த இடம் கம்போங் ஜெளுடோங் ஆனது.
பின் கியாங் பள்ளி இங்கு 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 400 மாணவர்கள் படித்த இந்தப் பள்ளி தொத்தடக்கத்தில் அங்குள்ள வாயாங் கலையரங்கத்தில் நடந்தது. பின்னர் மக்கள் இந்தத்தீவை விட்டு வெளியேறத் தொடங்கியவுடன் 1985 ஆம் ஆண்டு இந்த பள்ளி மூடப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தீவில் 1956 தொடங்கி 1970 வரை ஒரு தனியார் மலாய் பள்ளியும் நடந்து வந்தது.
1967ஆம் ஆண்டு இங்குள்ள காம்போங் பாஹ்ரு மட்டும் காம்போங் நூர்தீன் ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 30 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேசிய காவலர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
புலாவ் உபின் தீவு சிங்கப்பூர் நாட்டிலேயே, கான்க்ரீட் கட்டிடங்களும், தார் சாலைகளும் இல்லாத இயற்கையான ஒரே இடமாகும். பழமையான கம்போங் வாழ்க்கை இன்றளவும் இந்த தீவில் இருந்து வருகிறது. இந்த தீவிலும் வீடுகளை கட்டி அதில் மக்களை குடியமர்த்தி, கடல் வழியே தொடர் வண்டி சேவையும் தொடங்க அரசாங்கம் பல வருடங்களாக திட்டமிட்டு வருகிறது. ஆனால் இயற்கையான அழகை விரும்புபவர்கள் இதை எதிர்க்கின்றனர்.
2007 ஆம் ஆண்டு இந்தோனேசியா அரசு கிரானைட் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தமையால், சிங்கபூர் அரசு மீண்டும் இங்கு சுரங்கங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
தேசிய பல்லுயிர்மக் கழகம், மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்தத் தீவில் இருவாயன் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு இந்தத் தீவை விட்டு முற்றிலுமாக சென்று விட்ட இந்தப் பறவைகள் இப்பொழுது மீண்டும் இங்கு காணப்படுவதால் இவற்றில் அரசு மிகவும் அக்கறை காட்டிவருகிறது. பொதுவாக இருவாயன் பெண் பறவைகள் மரப்பொந்துகளில் முட்டையிடுவதால் அதற்கேற்ப இங்கு பொந்துகள் இல்லாத காரணத்தாலும் இந்தத் தீவில் செயற்கை மரப்பொந்துகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பொருத்தப்பட்டுள் புகைப்படக் கருவிகள், இந்த பறவைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.