![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Istanbul_collage_5j.jpg/640px-Istanbul_collage_5j.jpg&w=640&q=50)
இசுதான்புல்
From Wikipedia, the free encyclopedia
இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.
இசுதான்புல்
İstanbul | |
---|---|
பெருநகர நகராட்சி | |
இசுதான்புல் பெருநகர நகராட்சி | |
![]() மேலிருந்து வலஞ்சுழியாக: கலட்டாவிற்கும் செரக்லியோ முனைக்கும் நடுவில் உள்ள தங்க ஹோர்ன்; மசுலாக் நிதியியல் மாவட்டம்; இசுடிக்லல் அவெனியூ; குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை; மற்றும் சுல்தான் அஹமட் பள்ளிவாசல் | |
நாடு | துருக்கி |
பகுதி | மர்மரா |
மாகாணம் | இசுதான்புல் |
- பைசாந்தியம் | கி.மு. 660 |
- கொன்ஸ்தாந்திநோபிள் | கி.பி. 330 |
- இசுதான்புல் | 1930 (உத்தியோகபூர்வமாக) |
மாவட்டங்கள் | 39 |
அரசு | |
• மேயர் | கதிர் தொப்பாசு (ஏ.கே.பி) |
பரப்பளவு | |
• மாநகரம் | 5,343 km2 (2,063 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• பெருநகர நகராட்சி | 1,41,60,467 |
• தரவரிசை | துருக்கியில் 1 ஆவது, உலகில் 5 ஆவது |
• அடர்த்தி | 2,725/km2 (7,060/sq mi) |
இனங்கள் | இசுதான்புலைட்டு(கள்) (துருக்கியம்: இசுதான்புல்லு(லார்)) |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
அஞ்சல் குறியீடு | 34000 இல் இருந்து 34850 வரை |
Area code(s) | 0212 (ஐரோப்பியப் பக்கம்) 0216 (ஆசியப் பக்கம்)தொலைபேசி குறியீடு |
வாகனப் பதிவு | 34 |
இணையதளம் | இசுதான்புல் பெருநகர நகராட்சி |