From Wikipedia, the free encyclopedia
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெற்றன.[3][4] இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளில் (24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள்) இருந்து 8,356 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.[5][6][7] அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.[6][8] இத்தேர்தலில் முதற்தடவையாக கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 40% உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.[9][10]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
341 உள்ளாட்சி மன்றங்களில் இருந்து 8,356 உறுப்பினர்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இத்தேர்தல்களில் 70% வாக்களித்தனர். பெரும் வன்முறைகள் எதுவுமின்றி வாக்களிப்புகள் இடம்பெற்றன.[11][12][13] முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் இலங்கை பொதுசன முன்னணி பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றியது.
உள்ளூராட்சி சபைகளுக்கு கடைசியாக 322 சபைகளுக்கு 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.[14] முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கு ஈழப் போர் இடப்பெயர்வு காரணமாக நடைபெறவில்லை.[15][16] 2011 இன் பின்னர் ஆறு புதிய உள்ளாட்சி சபைகள் (1 மாநகரசபை, 5 பிரதேசசபைகள்) தோற்றுவிக்கப்பட்டு, மொத்தம் 341 ஆக அதிகரிக்கப்பட்டன.[17][18][19][20]
உள்ளாட்சி சபைகளின் ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகள் எனினும், மேலும் ஓராண்டு காலம் ஆட்சியை நீடிக்க நடுவண் அரசுக்கு உரிமை உண்டு.[21][22] 234 உள்ளாட்சி சபைகளுக்கு 2011 மார்ச் 31 இல் ஆட்சிக்காலம் முடிவடைந்தது, ஆனாலும் 2015 மே 15 வரை ஆட்சிக்காலம் நீடிகப்பட்டது.[23][24][25] அதன் பின்னர் இச்சபைகள் கலைக்கப்பட்டு, அரசினால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணைக்குழுவிடம் இவற்றின் நிருவாகம் ஒப்படைக்கப்பட்டது.[26][27] இதே போன்று 2015 சூலை 31 இல் ஆட்சிக் காலம் முடிவடைந்த மேலும் 65 உள்ளாட்சி சபைகளின் நிருவாகமும் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.[28][29] 2016 சூன் 30 இல் ஆட்சிக்காலம் முடிவடைந்த மேலும் 23 சபைகள் கலைக்கப்பட்டு அவற்றின் நிருவாகம் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.[30][31][32]
இலங்கையில் அண்மைய தேர்தல் முடிவுகள் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேர்தல் நாள்கள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | ஐக்கிய தேசியக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | மக்கள் விடுதலை முன்னணி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | சுயேச்சை | ||||||
வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | |
2011 உள்ளூராட்சி தேர்தல் | 4,821,203 | 56.45% | 2,710,222 | 31.73% | 255,078 | 2.99% | 242,502 | 2.84% | 140,727 | 1.65% | 219,998 | 2.58% |
2015 அரசுத்தலைவர் தேர்தல் | 5,768,090 | 47.58% | 6,217,162 | 51.28% [கு 3] | - | - | - | - | - | - | - | - |
2015 நாடாளுமன்றத் தேர்தல் | 4,732,664 | 42.38% | 5,098,916 | 45.66% [கு 4] | 515,963 | 4.62% | 543,944 | 4.87% | 44,193 | 0.40% | 42,828 | 0.38% |
தேர்தலுக்கு முந்தைய இலங்கை அரசியல் வரைபடம் | ||||
---|---|---|---|---|
2015 அரசுத்தலைவர் தேர்தல் | 2015 நாடாளுமன்றத் தேர்தல் | |||
தேர்தல் மாவட்டம் அல்லது மாநகரசபை வாரியாக அதிக வாக்குகளைப் பெற்ற தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்: |
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கலப்பு முறை வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த 2012 அக்டோபர் 10 இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. இதன் படி, 70% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 30% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.[33][34][35][36]
கலப்பு வாக்குரிமையால் சில பிரதிகூலங்கள் இருப்பதாக சில சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் முறைப்பாடு செய்ததை அடுத்து, 2017 ஆகத்து 25 இல் மேலும் ஒரு திருத்தச்சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதன் படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 40% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.[37][38][39]
2012 டிசம்பர் 12 இல் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க ஜயலத் திசாநாயக்கா தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அரசு நியமித்தது.[40] இதன் அறிக்கை 2015 சூன் 19 இல் சமர்ப்பிக்கப்பட்டது.[41] இவ்வறிக்கையின் படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,081 ஆக அதிகரிக்கப்பட்டது.[42] 2015 ஆகத்து 21 இல் உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது.[43][44] புதிய வட்டாரங்கள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, இது குறித்து ஆராய்வதற்கு அசோக்கா பீரிசு தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.[41][45] இக்குழுவின் அறிக்கை 2017 சனவரி 17 இல் சமர்ப்பிக்கப்பட்டது.[46][47][48] திருத்தப்பட்ட வட்டாரங்கள் பற்றிய விபரங்கள் 2017 பெப்ரவரி 17 இல் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.[49]
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என 2016 பெப்ரவரியில் அரசு திருத்தச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றியது.[50][51][52]
93 உள்ளூராட்சி சபைகளுக்கு (7 மாநகர சபைகள், 18 நகரசபைகள், 68 பிரதேச சபைகள்) நியமனப் பத்திரங்கள் 2017 டிசம்பர் 11 முதல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[53][54] 466 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், 57 மனுக்கள் சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து மொத்தம் 523 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 500 மனுக்கள் (447 கட்சிகளில் இருந்தும், 53 சுயேட்சைக் குழுக்களிடமும் இருந்து) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[55]
ஏனைய 248 சபைகளுக்கு (17 மாநகரசபைகள், 23 நகரசபைகள், 208 பிரதேச சபைகள்) வேட்பு மனுக்கள் 2017 டிசம்பர் 18 முதல் 21 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[56] மொத்தம் 1,582 வேட்பு மனுக்கள் (1,399 கட்சிகளிடம் இருந்து, 183 சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து) கிடைக்கப்பெற்றன. இவற்றில் 1,553 மனுக்கள் (1,379 கட்சி, 174 சுயேட்சை) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[57][58]
அனைத்து 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் 2018 பெப்ரவரி 10 சனிக்கிழமை அன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய 2017 டிசம்பர் 18 இல் அறிவித்தார்.[59][60] இத்தேர்தலில் ஏறத்தாழ 13,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.[61][62] இத்தேர்தலுக்காக 4 பில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டது. 300,000 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.[8][9] அஞ்சல்-வழி வாக்களிப்பு 2018 சனவரி 25, 26 இல் இடம்பெற்றது.[63]
மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 57,066 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 8,356 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். 13,420 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றன. 15,760,867 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[5] காலி மாவட்டத்தைச் சேர்ந்த எல்பிட்டி பிரதேச சபைக்கு முறைப்பாடு ஒன்றை அடுத்து அங்கு தேர்தல் ஒத்திப்போடப்பட்டு,[5][64][65] 2019 அக்டோபர் 11 இல் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிலை சின்னத்தில் சில மாவட்டங்களிலும், இலங்கை சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் சில மாவட்டங்களிலும் போட்டியிட்டது. 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிட்டது.[66][67]
ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. இக்கட்சிச் சின்னத்தில் சம்பிக்க ரணவக்க தலைமையில் ஜாதிக எல உறுமய கட்சியும் போட்டியிடுகின்றது.[68][69] ரவூப் ஹக்கீம் தலைமையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழும், சில சபைகளில் தனித்தும் போட்டியிட்டது. மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடனும், சில சபைகளில் ஏணி சின்னத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தனித்தும் போட்டியிட்டது.[70]
இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி அமைத்து போட்டியிட்டார்.[71] இக்கட்சி பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.[72]
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டது. இக்கூட்டணியில் சித்தார்த்தன் தலைமையில் புளொட் அமைப்பும் போட்டியிட்டது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி "தமிழ்த் தேசியப் பேரவை" என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டது.
மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதே வேளையில், பின்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கு ஏணி சின்னத்தில் "ஒருமித்த முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் தனித்துப் போட்டியிட்டது.[70]
340 உள்ளூராட்சி சபைகளில் 141 இல் மட்டுமே கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றன - இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 126, ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 5, சுயேட்சைகள் 2, தேசிய காங்கிரசு 2, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 2, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) 1, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) 1.[73]
மீதியான 199 சபைகளில் இபொசமு 95 சபைகளிலும், ததேகூ 36 சபைகளிலும், ஐதேமு 29 சபைகளிலும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4 இலும், ஐமசுகூ 4 இலும், சுயேட்சைகள் மூன்றிலும், இதொகா இரண்டிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டிலும், ஈபிடிபி, ஐக்கிய இலங்கை பெரும் பேரவை, முசுலிம் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன தலா ஒவ்வொன்றிலும், அதிக இடங்களைக் கைப்பற்றின.
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | சபைகள் | |||
---|---|---|---|---|---|---|---|
வட். | வி.சா | மொத்தம் | |||||
|
5,006,837 | 40.47% | 3,255 | 181 | 3,436 | 126 | |
3,640,620 | 29.42% | 872 | 1,561 | 2,433 | 5 | ||
|
1,497,234 | 12.10% | 204 | 844 | 1,048 | 2 | |
மக்கள் விடுதலை முன்னணி | 710,932 | 5.75% | 1 | 433 | 434 | 0 | |
337,877 | 2.73% | 389 | 28 | 417 | 2 | ||
சுயேச்சைகள் | 374,132 | 3.02% | 93 | 181 | 274 | 2 | |
85,198 | 0.69% | 45 | 57 | 102 | 0 | ||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 74,128 | 0.60% | 41 | 57 | 98 | 1 | |
72,493 | 0.59% | 22 | 56 | 78 | 0 | ||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[கு 10] | 92,897 | 0.75% | 44 | 29 | 73 | 0 | |
|
85,437 | 0.69% | 21 | 44 | 65 | 0 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[கு 13] | 100,641 | 0.81% | 38 | 21 | 59 | 1 | |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்[கு 7] | 44,062 | 0.36% | 14 | 23 | 37 | 0 | |
|
50,974 | 0.41% | 2 | 24 | 26 | 0 |
ஏனையவை | 199,354 | 1.61% | 33 | 95 | 128 | 2 | |
---|---|---|---|---|---|---|---|
தேசிய காங்கிரசு[கு 14] | 26,465 | 0.21% | 18 | 8 | 26 | 2 | |
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி | 38,682 | 0.31% | 1 | 20 | 21 | 0 | |
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி | 24,275 | 0.20% | 0 | 18 | 18 | 0 | |
தேசிய மக்கள் கட்சி | 17,128 | 0.14% | 0 | 10 | 10 | 0 | |
முசுலிம் தேசியக் கூட்டமைப்பு | 9,704 | 0.08% | 3 | 6 | 9 | 0 | |
ஐக்கிய இலங்கை பெரும் பேரவை | 7,011 | 0.06% | 6 | 0 | 6 | 0 | |
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 11,187 | 0.09% | 0 | 5 | 5 | 0 | |
ஐக்கிய அமைதிக் கூட்டமைப்பு | 10,861 | 0.09% | 1 | 4 | 5 | 0 | |
ஐக்கிய மக்கள் கட்சி | 9,035 | 0.07% | 0 | 5 | 5 | 0 | |
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி | 4,990 | 0.04% | 0 | 5 | 5 | 0 | |
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி | 4,890 | 0.04% | 1 | 4 | 5 | 0 | |
மக்கள் நல முன்னணி | 6,782 | 0.05% | 1 | 2 | 3 | 0 | |
சனநாயக தேசிய இயக்கம் | 6,140 | 0.05% | 1 | 1 | 2 | 0 | |
இலங்கை தேசியப் படை | 4,592 | 0.04% | 0 | 2 | 2 | 0 | |
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 3,049 | 0.02% | 0 | 1 | 1 | 0 | |
இலங்கை மக்கள் கட்சி | 2,747 | 0.02% | 0 | 1 | 1 | 0 | |
லங்கா சமசமாஜக் கட்சி[கு 6] | 2,684 | 0.02% | 0 | 1 | 1 | 0 | |
இலங்கை லிபரல் கட்சி | 2,034 | 0.02% | 0 | 1 | 1 | 0 | |
இலங்கை சோசலிசக் கட்சி | 1,522 | 0.01% | 0 | 1 | 1 | 0 | |
ஐக்கிய இடது முன்னணி | 1,474 | 0.01% | 1 | 0 | 1 | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,162 | 0.01% | 0 | 0 | 0 | 0 | |
அனைவரும் குடிமக்கள் அனைவரும் மன்னர்கள் அமைப்பு | 931 | 0.01% | 0 | 0 | 0 | 0 | |
நவ சமசமாஜக் கட்சி | 730 | 0.01% | 0 | 0 | 0 | 0 | |
தாய்நாடு மக்கள் கட்சி | 521 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
புதிய சிங்கள் மரபு | 282 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
சோசலிச சமத்துவக் கட்சி | 145 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
சனநாயக இடது முன்னணி | 134 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
அகில இலங்கை தமிழ் பெரும் பேரவை | 117 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
சனநாயகத் தேசியக் கூட்டணி | 45 | 0.00% | 0 | 0 | 0 | 0 | |
நமது தேசிய முன்னணி | 35 | 0.00% | 0 | 0 | 0 | 0 |
கட்டுப்பாட்டுக்கு வராத சபைகள் | 199 |
செல்லுபடியான வாக்குகள் | 12,372,816 | 100.00% | 5,074 | 3,634 | 8,708 | 340 | |
---|---|---|---|---|---|---|---|
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 210,970 | 1.68% | |||||
மொத்த வாக்குகள் | 12,583,786 | 79.94% | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,742,371 |
அடிக்குறிப்புகள் |
---|
இலங்கை பொதுசன முன்னணி வென்ற மாவட்டங்கள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற மாவட்டங்கள் |
ஐக்கிய தேசிய முன்னணி வென்ற மாவட்டங்கள் |
மாவ | மாகா | இலங்கை பொதுசன முன்னணி | ஐக்கிய தேசிய முன்னணி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | மக்கள் விடுதலை முன்னணி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | வாக்குவீதம் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இருக்கைகள் | வாக்குகள் | % | இருக்கைகள் | வாக்குகள் | % | இருக்கைகள் | வாக்குகள் | % | இருக்கைகள் | வாக்குகள் | % | இருக்கைகள் | |||||||||||||
வ. | வி. | மொ | வ. | வி. | மொ | வ. | வி. | மொ | வ. | வி. | மொ | வ. | வி. | மொ | |||||||||||||
அம் | கிழ | 88,098 | 22.15% | 96 | 4 | 100 | 114,356 | 28.76% | 40 | 65 | 105 | 41,102 | 10.34% | 19 | 25 | 44 | 9,690 | 2.44% | 0 | 11 | 11 | 24,468 | 6.15% | 27 | 0 | 27 | 80.24% |
அனு | வம | 245,545 | 43.93% | 193 | 0 | 193 | 155,041 | 27.74% | 20 | 87 | 107 | 88,646 | 15.86% | 7 | 51 | 58 | 38,182 | 6.83% | 0 | 25 | 25 | - | - | - | - | - | 82.04% |
பது | ஊ | 162,577 | 31.41% | 109 | 19 | 128 | 169,132 | 32.68% | 77 | 53 | 130 | 104,406 | 20.17% | 32 | 54 | 86 | 34,132 | 6.59% | 0 | 26 | 26 | - | - | - | - | - | 81.98% |
மட் | கிழ | 408 | 0.14% | 0 | 0 | 0 | 44,619 | 15.26% | 13 | 24 | 37 | 45,031 | 15.40% | 24 | 14 | 38 | 1,003 | 0.34% | 0 | 0 | 0 | 80,622 | 27.58% | 69 | 6 | 75 | 76.20% |
கொழு | மே | 476,873 | 38.38% | 185 | 34 | 219 | 410,522 | 33.04% | 115 | 82 | 197 | 134,147 | 10.80% | 3 | 57 | 60 | 104,707 | 8.43% | 0 | 46 | 46 | - | - | - | - | - | 76.79% |
காலி | தெ | 321,102 | 50.46% | 238 | 3 | 241 | 169,234 | 26.59% | 15 | 97 | 112 | 75,827 | 11.91% | 2 | 49 | 51 | 40,634 | 6.38% | 0 | 28 | 28 | - | - | - | - | - | 81.19% |
கம் | மே | 655,554 | 49.19% | 341 | 19 | 360 | 395,360 | 29.66% | 68 | 143 | 211 | 136,298 | 10.23% | 6 | 63 | 69 | 102,177 | 7.67% | 0 | 54 | 54 | - | - | - | - | - | 78.64% |
அ.தோ | தெ | 199,018 | 49.94% | 138 | 6 | 144 | 101,702 | 25.52% | 21 | 50 | 71 | 41,059 | 10.30% | 1 | 28 | 29 | 51,029 | 12.81% | 0 | 32 | 32 | - | - | - | - | - | 83.08% |
யாழ் | வட | 3,287 | 1.08% | 0 | 3 | 3 | 19,105 | 6.30% | 5 | 20 | 25 | 24,461 | 8.07% | 6 | 26 | 32 | 553 | 0.18% | 0 | 0 | 0 | 105,947 | 34.94% | 141 | 12 | 153 | 65.81% |
களு | மே | 350,382 | 46.55% | 212 | 3 | 215 | 235,118 | 31.24% | 56 | 94 | 150 | 79,000 | 10.50% | 2 | 48 | 50 | 47,754 | 6.34% | 1 | 30 | 31 | - | - | - | - | - | 81.75% |
கண் | மத் | 360,732 | 41.41% | 255 | 17 | 272 | 303,053 | 34.79% | 109 | 111 | 220 | 109,749 | 12.60% | 7 | 72 | 79 | 37,184 | 4.27% | 0 | 24 | 24 | - | - | - | - | - | 81.15% |
கேகா | சப் | 249,431 | 46.05% | 171 | 7 | 178 | 180,579 | 33.34% | 42 | 78 | 120 | 72,209 | 13.33% | 3 | 44 | 47 | 21,807 | 4.03% | 0 | 12 | 12 | - | - | - | - | - | 82.20% |
கிளி | வட | 474 | 0.75% | 0 | 0 | 0 | 3,009 | 4.73% | 0 | 3 | 3 | 3,174 | 4.99% | 0 | 5 | 5 | 488 | 0.77% | 0 | 0 | 0 | 30,205 | 47.48% | 33 | 1 | 34 | 74.82% |
குரு | வமே | 505,749 | 47.68% | 325 | 8 | 333 | 341,983 | 32.24% | 50 | 153 | 203 | 120,163 | 11.33% | 2 | 67 | 69 | 58,776 | 5.54% | 0 | 35 | 35 | - | - | - | - | - | 81.62% |
மன் | வட | 2,536 | 3.67% | 0 | 3 | 3 | 23,587 | 34.14% | 26 | 8 | 34 | 5,993 | 8.67% | 0 | 8 | 8 | 91 | 0.13% | 0 | 0 | 0 | 19,487 | 28.21% | 25 | 3 | 28 | 80.36% |
மாத் | மத் | 151,130 | 47.19% | 138 | 3 | 141 | 107,117 | 33.44% | 26 | 65 | 91 | 36,287 | 11.33% | 4 | 30 | 34 | 15,413 | 4.81% | 0 | 12 | 12 | - | - | - | - | - | 80.74% |
மா.றை | தெ | 275,767 | 53.48% | 207 | 1 | 208 | 135,672 | 26.31% | 17 | 84 | 101 | 50,803 | 9.85% | 0 | 37 | 37 | 47,922 | 9.29% | 0 | 33 | 33 | - | - | - | - | - | 81.48% |
மொன | ஊ | 164,295 | 53.88% | 113 | 1 | 114 | 85,296 | 27.97% | 8 | 48 | 56 | 30,580 | 10.03% | 0 | 21 | 21 | 20,184 | 6.62% | 0 | 14 | 14 | - | - | - | - | - | 85.83% |
முல் | வட | 2,291 | 4.11% | 1 | 1 | 2 | 8,279 | 14.85% | 5 | 7 | 12 | 4,580 | 8.22% | 0 | 7 | 7 | 394 | 0.71% | 0 | 0 | 0 | 22,682 | 40.69% | 30 | 2 | 32 | 77.76% |
நுவ | மத் | 107,015 | 24.04% | 64 | 20 | 84 | 165,597 | 37.20% | 69 | 47 | 116 | 44,793 | 10.06% | 13 | 23 | 36 | 11,365 | 2.55% | 0 | 8 | 8 | - | - | - | - | - | 81.04% |
பொல | வம | 94,136 | 35.09% | 51 | 11 | 62 | 69,474 | 25.90% | 10 | 33 | 43 | 89,005 | 33.18% | 41 | 17 | 58 | 12,866 | 4.80% | 0 | 8 | 8 | - | - | - | - | - | 84.27% |
புத் | வமே | 182,637 | 42.94% | 124 | 9 | 133 | 134,007 | 31.50% | 38 | 59 | 97 | 53,699 | 12.62% | 12 | 29 | 41 | 15,392 | 3.62% | 0 | 10 | 10 | - | - | - | - | - | 73.30% |
இர | சப் | 362,296 | 52.28% | 230 | 2 | 232 | 218,987 | 31.60% | 27 | 109 | 136 | 62,865 | 9.07% | 1 | 39 | 40 | 33,152 | 4.78% | 0 | 21 | 21 | - | - | - | - | - | 82.53% |
திரு | கிழ | 37,638 | 16.99% | 50 | 4 | 54 | 35,736 | 16.14% | 10 | 28 | 38 | 28,969 | 13.08% | 12 | 21 | 33 | 4,395 | 1.98% | 0 | 2 | 2 | 32,446 | 14.65% | 33 | 3 | 36 | 82.29% |
வவு | வட | 7,866 | 9.33% | 14 | 3 | 17 | 14,055 | 16.68% | 5 | 13 | 18 | 14,388 | 17.07% | 7 | 9 | 16 | 1,642 | 1.95% | 0 | 2 | 2 | 22,020 | 26.13% | 31 | 1 | 32 | 75.03% |
மொத்தம் | 5,006,837 | 40.47% | 3,255 | 181 | 3,436 | 3,640,620 | 29.42% | 872 | 1,561 | 2,433 | 1,497,234 | 12.10% | 204 | 844 | 1,048 | 710,932 | 5.75% | 1 | 433 | 434 | 337,877 | 2.73% | 389 | 28 | 417 | 79.94% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.