From Wikipedia, the free encyclopedia
இசுப்புட்னிக் 2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக் கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் லைக்கா வைக்கப்பட்டது.
இயக்குபவர் | சோவியத் ஒன்றியம் |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | OKB-1 |
திட்ட வகை | புவியியல் விஞ்ஞானம் |
செயற்கைக்கோள் | பூமி |
சுற்றுப்பாதைகள் | ~2,000 |
ஏவப்பட்ட நாள் | நவம்பர் 3, 1957 at 02:30:00 UTC |
ஏவுகலம் | R-7/SS-6 ICBM |
திட்டக் காலம் | 162 தினங்கள் |
Orbital decay | ஏப்ரல் 14, 1958 |
தே.வி.அ.த.மை எண் | 1957-002A |
இணைய தளம் | NASA NSSDC Master Catalog |
நிறை | 508.3 kg (1,120 lb.) |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
அரைப் பேரச்சு | 7,314.2 km (4,545 milies) |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | .098921 |
சாய்வு | 65.33° |
சேய்மைநிலை | 1,660 km (1,031 மைல்கள்) |
அண்மைநிலை | 212 km (132 மைல்கள்) |
சுற்றுக்காலம் | 103.7 நிமிடங்கள் |
பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.