ஹேலோஅல்கென் (haloalkanes, halogenoalkanes அல்லது alkyl halides) எனப்படுவது அல்கேன் ஒன்றுடன் உப்பீனிகள் (ஹாலஜன்) சேருவதன் மூலம் உருவாகும் கரிமச் சேர்மமாகும்.ஹேலோஅல்கென்கள் வர்த்தகரீதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தீயணைப்புக் கருவியாகவும், குளிரூட்டி, கரைப்பான்கள், மருந்துகள் என்பனவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவை மிகவும் முக்கிய மாசுபடுத்தியாகவும் நச்சுப் பொருளாகவும் இனங்காணப்பட்டுள்ளன. உதாரணமாக, குளோரோஃபுளோரோ காபன்கள் ஓசோன் படைத் தேய்வுக்குக் காரணமாக இனங்காணப்பட்டுள்ளன. குளோரின், புரோமின் மற்றும் அயடின் ஆகியவற்றைக் கொண்ட ஹேலோஅல்கென் மாத்திரமே ஓசோன் படை அழிவுக்குக் காரணமாகும். எவ்வாறாயினும், இயற்கையில் காணப்படும் மெதைல் அயடைட் ஓசோன் படை அழிவுக்குப் பங்களிப்புச் செய்வதில்லை. இதனால் ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகவரகம் இதனை ஓசோன் தேய்வுக்கு பங்களிக்காத சேர்வையாக வகைப்படுத்தியுள்ளது. அல்லது அல்கைல் ஏலைட்டுக்கள் ஹேலோஅல்கென் RX″ எனும் பொதுச் சூத்திரத்தை கொண்டன. இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமும் X என்பது ஒரு அலசனும் ஆகும்.

Thumb
டெற்றாஃபுளோரோதேன் (ஒரு ஹேலோஅல்கென்) என்பது ஒரு நிறமற்ற திரவமாகும். இதன் கொதிநிலை அறை வெப்பநிலையிலும் மிகவும் குறைந்ததாகும். இவை பொதுவான தூசு துடைப்பானிலிருந்து பாவனையின் போது மாற்றுவதன் மூலம் பிரித்தெடுக்கப்படலாம்.

ஆலோஅல்கேன்கள் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் எதைல் குளோரைட்டு செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் சேதன ரசாயனவியலின் வளர்ச்சியாலும், அல்கேன்களின் கட்டமைப்பு பற்றி அறிந்து கொண்டமையாலும், முறையான தயாரிப்புக்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட C-அலசன் பிணைப்பு உருவாக்கத்துக்கான வழிமுறைகளும் வளர்ச்சியடைந்தன. சிறப்பான பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள், அல்கீன்களுக்கு அலசன்களைச் சேர்த்தல், அல்கீன்களுக்கு ஐதரசன் ஏலைட்டுக்களைச் சேர்த்தல் மற்றும் அல்ககோல்களை அல்கைல் ஏலைட்டுக்களாக மாற்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இம் முறைகள் மிகவும் நம்பகரமானவையாக இருந்தமையால், ஹலோ அல்கேன்கள் கைத்தொழில் இரசாயனவியல் பயன்பாடுகளுக்கு இலகுவாகப் பெறக்கூடியதாக இருந்தன. மேலும், ஏலைட்டுக்கள் இலகுவாக வேறு தொழிற்படு கூட்டங்களாக மாற்றக்கூடியதாகவும் இருந்தன.

பெரும்பாலான ஹலோஅல்கேன்கள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டாலும், இயற்கையான முறையிலும் இவை வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் பக்டீரியா, ஃபங்கசு மற்றும் கடற்களைகள் ஆகியவற்றின் நொதியச் செயற்பாடுகளின் மூலம் இவை வெளியாகின்றன. 1600க்கும் மேற்பட்ட அலசனேற்றப்பட்ட சேதனப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் புரோமோஅல்கேனே முக்கிய சேர்வையாகும். உயிரியலில் புரோமினேற்றப்பட்ட சேதனப் பொருட்களாக உயிரியல் ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மெதைல் புரோமைட்டிலிருந்து அல்கேன் இல்லாத அரோமட்டிக்குகள் மற்றும் நிரம்பாச் சேர்வைகள் (இந்தோல்கள், தேர்ப்பீன்கள், அசெற்றோஜெனின்கள் மற்றும் பீனோல்கள்) வரை காணப்படுகின்றன.[1] [2] நிலத் தாவரங்களில் அலசனேற்றப்பட்ட அல்கேன்கள் காணப்படுவது மிகவும் அரிதாகும். எனினும், 40 வகையான தாவரங்களில் ஃபுளோரோ அசற்றேற்று எனும் நச்சுப்பொருள் உருவாக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பக்டீரியாக்களில்,ஹேலோஅல்கென் களிலிருந்து அலசன்களை அகற்றும் சிறப்பான, அலசனகற்றி நொதியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வகைப்பாடு

கட்டுமானத் தோற்றத்தின் அடிப்படையில் ஆலசன்கள் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவின் இணைப்பிற்கு ஏற்ப ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு ஆல்க்கைல் குழுவுடன் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் அது முதல்நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது. இதற்கு உதாரணம் குளோரோ ஈத்தேன் (CH3CH2Cl) ஆகும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு இரண்டு C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது இரண்டாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு மூன்று C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது மூன்றாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது.

ஏழாவது குழுவில் இடம்பெற்றுள்ள ஆலசனின் தன்மைக்கு ஏற்பவும் ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கார்பனுடன் பிணைக்கப்பட்டுள்ள புளோரின், குளோரின், புரோமின், மற்றும் அயோடின் போன்ற ஆலசன்கள் அடிப்படையில் கரிமபுளோரின், கரிமகுளோரின், கரிமபுரோமின் மற்றும் கரிம அயோடின் சேர்மங்கள் என்றும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆலசன்களைப் பெற்றுள்ள சேர்மங்கள் உருவாகவும் சாத்தியங்கள் உள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணற்ற ஆலோ ஆல்க்கேன்கள் இவ்வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ புளோரோ கார்பன்கள் உள்ளிட்டவை இவ்வகைப்பாட்டில் அடங்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு விவாதங்களில் இந்த ஆலோ ஆல்க்கேன்கள் சுருக்கக் குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

பண்புகள்

ஆலோ ஆல்க்கேன்கள் பொதுவாக தாய் ஆல்க்கேன்கள் போல நிறமற்றும், ஒப்பீட்டளவில் மணமற்றும் நீர் விலக்கிகளாகவும் காணப்படுகின்றன. குளோரோ-, புரோமோ- மற்றும் அயோடோ ஆல்க்கேன்களின் கொதிநிலை, உருகுநிலை போன்றவை ஒத்தவரிசை ஆல்க்கேன்களை விட அதிகமாக உள்ளன. அணு எடையையும் ஆலைடுகளின் எண்ணிக்கையும் இந்த அளவிடலில் பயன்படுகின்றன. மூலக்கூறிடை விசைகளின் வலிமை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும். இதனால் கார்பன் டெட்ரா அயோடைடு திண்மமாகவும் அதேவேளையில் கார்பன் டெட்ராகுளோரைடு நீர்மமாகவும் காணப்படுகின்றன. பல புளோரோ ஆல்க்கேன்கள் இப்போக்கிற்கு மாறாக செயல்படுகின்றன. புளோரினேற்றம் அடையாத அதனுடைய ஒத்தவரிசை சேர்மங்களைக் காட்டிலும் குறைவான உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவையாக இவை உள்ளன. உதாரணமாக மீத்தேனின் உருகுநிலை -182.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். ஆனால் டெட்ராபுளோரோமீத்தேனின் உருகுநிலை -183.6 ° செல்சியசு வெப்பநிலை ஆகும்.

குறைவான C–H பிணைப்புகள் கொண்டிருப்பதால் ஆலோகார்பன்கள் ஆல்க்கேன்களைக் காட்டிலும் குறைவான தீப்பற்றும் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. சில ஆலோகார்பன்கள் தீத்தடுப்பான்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகரித்த முனைவுத் தன்மையின் காரணமாக தொடர்புடைய ஆல்க்கேன்களைக்க் காட்டிலும் இவை சிறந்த கரைப்பான்களாகச் செயல்படுகின்றன. புளோரினைத் தவிர இதர ஆலசன்களைக் கொண்டிருக்கும் ஆலோ ஆல்க்கேன்கள் தாய் ஆல்க்கேன்களை விட அதிக வினைத்திறன் கொண்டவையாக உள்ளன.

தோற்றம்

ஆலோ ஆல்க்கேன்கள் பரவலாக இருப்பதாலும் பல பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள் கொண்டிருப்பதாலும் கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன. கடல்கள் வருடந்தோறும் 1-2 மில்லியன் டன் புரோமோமெத்தேனை விடுவிக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் ஆலசன்களைக் குறிப்பாக புளோரினைக் கொண்டுள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஐந்தில் ஒரு பாகம் மருந்துகளில் புளோரின் இடம்பெற்று உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 5-புளோரோர்சில், புளோசெட்டின், பாரோசெட்டின், சிப்ரோபுளோவசின், மெப்ளோகுயின், புளோகோனசோல் உள்ளிட்ட மருந்துகள் இதற்கு உதாரணங்களாகும். C-F பிணைப்பு ஒப்பீட்டளவில் வினைத்திறன் அற்று இருப்பதால் சில நன்மைகள் ஏற்படுகின்றன. புளோரின் பதிலீடு செய்யப்பட்ட ஈதர்கள் ஆவியாகும் மயக்க மருந்துகளாகும். மெத்தாக்சிபுளோரேன், என்புளோரேன், ஐசோபுளோரேன், செவோபுளோரேன் மற்றும் டெசுபுளோரேன் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். புளோரோ கார்பன் மயக்கமருந்துகள் டை எத்தில் ஈதர் மற்றும் வளைய புரோப்பேன் ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் போது தீங்கு விளைவுகள் குறைகின்றன. பெர்புளோரினேற்ற ஆல்க்கேன்கள் இரத்த பதிலீடுகளாக பயன்படுகின்றன.

குளோரினேற்றம் அல்லது புளோரினேற்றம் பெற்ர ஆல்க்கீன்கள் பலபடியாக்க வினைகளில் ஈடுபடுகின்றன. பாலிவினைல் குளோரைடு, டெப்ளான் போன்றன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.