ஆகு பெயர்
ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல் / From Wikipedia, the free encyclopedia
ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். ஆனால், பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.