அல்கம்றா
From Wikipedia, the free encyclopedia
அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.[1][2][3]
விரைவான உண்மைகள் அல்கம்பிரா, செனெரலைஃப் மற்றும் அல்பாய்சின், கிரெனடா, வகை ...
அல்கம்பிரா, செனெரலைஃப் மற்றும் அல்பாய்சின், கிரெனடா | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, iii, iv |
உசாத்துணை | 314 |
UNESCO region | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1984 (8th தொடர்) |
விரிவாக்கம் | 1994 |
மூடு
ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.